கொரோனா காலத்திலும் கிரிக்கெட் சூதாட்டம் படு ஜோர்; 1.23 கோடி ரூபாய் பணம் பறிமுதல் ஒருவர் கைது
ஜலந்தர் : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் 117 நாட்களுக்கு பிறகு கடந்த 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் துவங்கியுள்ளது.
Recommended Video
இந்த போட்டியையொட்டி ஜலந்திரில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட சவுரவ் வர்மா என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து 1.23 கோடி ரூபாய் பணம், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த சூதாட்டத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சைபர் செல்லிடம் இந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டம்.. கைது
உலக அளவில் மிகவும் பணம் கொழிக்கும் போட்டியாக கிரிக்கெட் விளங்குகிறது. ஒவ்வொரு நாடும் மற்ற போட்டிகளை காட்டிலும் இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கிரிக்கெட்டில் அவ்வப்போது சூதாட்டங்களும் நடைபெற்று வருகிறது. போலீசார் அவ்வப்போது அதில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
கடந்த 4 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகள் கொரோனா காரணமாக முடங்கியிருந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் கடந்த 8ம் தேதி மீண்டும் துவங்கியுள்ளது. ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டிகள் நடத்தப்பட்டாலும், மீண்டும் போட்டிகள் துவங்கியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜலந்தரில் ஒருவர் கைது
இந்நிலையில் சில மாதங்களாக முடங்கியிருந்த கிரிக்கெட் சூதாட்டமும் மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஜலந்தரில் சவுரவ் வர்மா என்ற ஆர்க்கிடெக்ட் ஒருவர் கடந்த சில வருடங்களாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூ.1.23 கோடி, கம்ப்யூட்டர், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வழக்குப்பதிவு
இதுகுறித்த விசாரணையை சைபர் செல்லிடம் வழங்கப்பட்டுள்ளதாக கமிஷனர் குப்ரீத் சிங் புல்லார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சவுரவ் வர்மா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications