
தவானை வீழ்த்தி சாதனை
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆண்டர்சன் பந்து வீச்சில் அவுட் ஆனார். அப்போது இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய பெருமையையும் ஆண்டர்சன் பெற்றார்.

முந்தைய சாதனை
இதற்கு முன்பு அந்த நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஃபிரெட் டுருமேன், 229 விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

ஃபிரெட் டுருமேன்
ஃபிரெட் டுருமேன் 1965ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடியிருந்தார். இங்கிலாந்து மண்ணில் 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

முன்னணி இடத்தில் ஆண்டர்சன்
அதே நேரம் ஆண்டர்சன் இங்கிலாந்தில் விளையாடிய 55வது டெஸ்ட் போட்டியில் இச்சாதனையை முறியடித்துள்ளார். 2003ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக சர்வதேச அணியில் இடம் பிடித்த ஆண்டர்சன் அந்த அணியில் தொடர்ந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளராக நீடித்து வருகிறார்.

கொக்கரித்த குக்
இந்திய வீரர் ஜடேஜாவை தள்ளி விட்டதற்காக இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சனுக்கு எதிராக ஐசிசியில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக ஜடேஜா மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் புகார் அளித்தது. இந்த புகார்களை தொடர்ந்து, பேசிய இங்கிலாந்து கேப்டன் குக், ஆண்டர்சன் தனது பந்துவீச்சால் பேசிக்காண்பிக்க வேண்டும் என்று கொக்கரித்தார்.

ஆக்ரோஷமான ஆண்டர்சன்
கேப்டன் பேச்சை தட்டாமல், 2வது டெஸ்ட் போட்டியின் முதலாவது நாளான நேற்று ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications










