Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் போட்டி: ஹாக்கியில் வெள்ளி வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.30 லட்சம்- ஜெ. அறிவிப்பு

சென்னை: கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர்கள் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், ருபிந்தர்சிங் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹாக்கி வீரர் ஸ்ரீஜேசுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள பாராட்டுக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது :-

பெருமை...

பெருமை...

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில், ஆண்களுக்கான ஆக்கி போட்டியில் நீங்கள் பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றதால், தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

ரூ.30 லட்சம் பரிசு...

ரூ.30 லட்சம் பரிசு...

இந்த அற்புதமான சாதனை நிகழ்த்தியதற்காக உங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை ரூ.30 லட்சமாக உயர்த்தி 2011-ம் ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

பாராட்டு...

பாராட்டு...

தற்போது இந்த பரிசுத் தொகையைப் பெறுவதற்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள். உங்களுக்கும் உங்களின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நான் பாராட்டுகளை கூறிக்கொள்கிறேன். நீங்கள் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைத்து தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் புகழ் சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபிந்தர் சிங்....

ரூபிந்தர் சிங்....

அதேபோல், மற்றொரு ஹாக்கி வீரர் ருபிந்தர் சிங்கிற்கு எழுதியுள்ள பாராட்டுக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:-காமன்வெல்த் போட்டிகளில் ஆண்களுக்கான ஹாக்கி விளையாட்டில் நீங்கள் வெள்ளிப்பதக்கத்தை வென்று, இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள்...

இதற்காக தமிழக மக்கள் சார்பில் எனது இதயப்பூர்வமான பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளிப்பதக்கம் வென்ற நீங்கள், நான் ஏற்கனவே அறிவித்துள்ள ரூ.30 லட்சம் ரொக்கப்பரிசை பெறத் தகுதி பெற்றுள்ளீர்கள். உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் பாடுபட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, August 8, 2014, 11:42 [IST]
Other articles published on Aug 8, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+