Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெயவர்த்தனேவும் சதம் போட்டார் - இந்தியாவை முந்தியது இலங்கை

அகமதாபாத்: தொடக்க ஆட்டக்காரர் தில்ஷானைத் தொடர்ந்து முன்னாள் கேப்டன் மஹலா ஜெயவர்த்தனேவும் சதம் போட்டார். இதையடுத்து இந்தியாவின் ஸ்கோரைத் தாண்டிச் சென்றுள்ளது இலங்கை.

அகமதாபாத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 426 ரன்களை எடுத்தது. டிராவிட், கேப்டன் டோணி ஆகியோர் சதம் அடித்தனர்.

ஆனால் இதற்குப் பதிலடி தரும் வகையில் இலங்கை அபாரமான ஆட்டத்தை வெளி்ப்படுத்தியது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட்களுக்கு 275 ரன்கள் என்று முடித்திருந்தது.

இன்று ஆட்டம் தொடங்கியதிலிருந்தே அதன் ரன் குவிப்பு அதிகரித்துக் காணப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் அது இந்தியாவின் ஸ்கோரைத் தாண்டி லீட் எடுத்தது.

நேற்று ஆட்டம் இழக்காம்ல் இன்று தங்களது ஆட்டத்தைத் தொடர்ந்த ஜெயவர்த்தனேவதும், சமரவீராவும் ரன் குவிப்பில் குதித்தனர்.

சமரவீரா 70 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் ஜெயவர்த்தனே நிதானமாக ஆடி சதம் போட்டார். 133 ரன்களுடன் அவர் தொடர்ந்து ஆடி வருகிறார்.

அவருடன் பிரசன்னா ஜெயவர்த்னேவும் ஆட்டமிழக்காமல் ஆடி வருகிறார். அவர் 41 ரன்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 470 ரன்கள் எடுத்துள்ளது. இது இந்தியாவை விட 44 ரன்கள் அதிகுமாகும்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:33 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+