Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

டெல்லி: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜித்து ராய் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 4 பதக்கங்களை பெற்றுள்ளது.

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதன் முதல்நாள் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் பூஜா கட்கர் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் கணக்கை தொடங்கிவைத்தார்.

Jitu rai wins bronze in 10m rifle competition

இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் வெள்ளிப்பதக்கம் வென்றார். நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜித்து ராய்-ஹீனா சித்து ஜோடி தங்கம் வென்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ரைஃபிள் போட்டியில் ஜித்து ராய் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். இதன் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி பெற்றுள்ள பதக்கங்களின் எணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

Story first published: Tuesday, February 28, 2017, 13:42 [IST]
Other articles published on Feb 28, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+