Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

John cena ஓய்வு பெற்றார்... கடைசி போட்டியின் முடிவு என்ன? பிரியா விடையளித்த WWE ரசிகர்கள்

வாஷிங்டன்: பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா தனது கடைசி போட்டியில் விளையாடி ஓய்வு பெற்றார். மல்யுத்த பொழுதுபோக்கு தொடரான wwe-வில் முடிசூடா மன்னனாக விளங்கிய ஜான் சீனா உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களை கொண்டிருக்கின்றார்.இதுவரை wwe விளையாட்டு தொடரில் 17 முறை உலக சாம்பியன் பட்டத்தை ஜான் சீனா வென்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்த போட்டியில் அதிக சாம்பியன் பட்டம் வென்றது இவர் மட்டும்தான். இதே போன்று யு எஸ் சாம்பியன் பட்டத்தை ஐந்து முறையும், இன்டர் கான்டினெட்டல் சாம்பியன் பட்டத்தை ஒரு முறையும், Tag team சாம்பியன் பட்டத்தை நான்கு முறையும், இரண்டு முறை ராயல் ரம்பிள் தொடரையும் ஜான் சீனா வென்று இருக்கிறார்.

John cena

ஜான் சீனா இதுவரை தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்ட போட்டிகளின் எண்ணிக்கை 726 ஆகும். இதே போன்று wwe தொடரில் மாதம் மாதம் நடைபெறும் PLE ஈவென்டில் 100 போட்டிகள் வென்று அண்டர்டேக்கருக்கு பிறகு அதிக போட்டிகளை வென்ற வீரர் என்று பெருமையை பெற்றிருக்கிறார்.

ஜான் சீனா, ஜூன் மாதம் 27ஆம் தேதி 2002 ஆம் ஆண்டு முதல்முறையாக WWE போட்டியில் அறிமுகமானார். இந்த நிலையில் தனது கடைசி ஆட்டமான சாட்டர்டே நைட் மெயின் இவண்ட் தொடரில் வாஷிங்டனில் களமிறங்கினார். சுமார் 19000 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு ஜான் சீனாவுக்கு பிரியா விடை அளித்தனர்.

தனது இறுதி ஆட்டத்தில் Gunther என்ற வீரரை அவர் எதிர்கொண்டார். தனது வழக்கமான ஆக்ரோஷ சண்டையை ஜான் சீனா வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் இறுதியில் கண்டர் தன்னுடைய ஸ்பெஷல் சப்மிஷன் மூவை (Submission move) மேற்கொண்டு ஜான் சீனாவை டாப் அவுட்(Tap out) செய்தார்.

இதன் மூலம் ஜான் சீனா தனது கடைசி ஆட்டத்தில் தோல்வியை தழுவினார். இது அங்கு இருந்த ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக அமைந்தது. எனினும் ஜான் சீனாவுக்கு Thank you cena என்று முழக்கமிட்டு பிரியாவிடை அளித்தனர். ஜான் சீனாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிஎம் பங்க் மற்றும் கோடி ரூட்ஸ் தங்களுடைய சாம்பியன் பெல்ட் களை வழங்கி வழி அனுப்பி வைத்தனர். www தொடரில் விளையாடிய பல சக வீரர்கள் நேரடியாக வந்து ஜான் சீனாவுக்கு மரியாதை செலுத்தினர். இதனால் ஜான் சீனா கண்ணீர் மல்க ரசிகர்களிடம் நன்றி தெரிவித்து விட்டு வெளியேறினார்.

Story first published: Sunday, December 14, 2025, 9:51 [IST]
Other articles published on Dec 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+