பிளாக் பால் ஸ்குவாஷ் தொடர்.. ஜோஸ்னா சின்னப்பா காலிறுதிக்கு தகுதி
ஸ்குவாஷ்:7 ஆண்டுகள் கழித்து.. இங்கி. வீராங்கனையை வீழ்த்திய ஜோஸ்னா சின்னப்பா.. காலிறுதிக்கு தகுதி
கெய்ரோ: பிளாக் பால் ஸ்குவாஷ் தொடரில், இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா இங்கிலாந்தின் சாரா ஜேன் பேரியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மகளிர்களுக்கான பிளாக் பால் ஸ்குவாஷ் போட்டி எகிப்து நாட்டின் கெய்ரோவில் நடைபெற்று வருகிறது. இதில், 2ம் சுற்றுப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, இங்கிலாந்தை சேர்ந்த சாரா ஜேன் பெர்ரியை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜோஸ்னா 11-4, 6-11. 14-12, 11-9 என்ற செட் கணக்கில் சாரா ஜேன் பெர்ரியை வீழ்த்தினார். காலிறுதிச் சுற்றுக்கும் முன்னேறினார்.
Story first published: Wednesday, March 13, 2019, 19:37 [IST]
Other articles published on Mar 13, 2019


Click it and Unblock the Notifications