உசைன் போல்ட்டை வீழ்த்துவேன்: அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் சபதம் !
நியூயார்க் : பிரேசில் நாட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள கோடை கால ஒலிம்பிக் போட்டியில் உலகின் அதிவேக வீரர் உசேன் போல்ட்டை வீழத்துவேன் என்று அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் சபதம் விடுத்துள்ளார்.
உலகின் அதி வேக மனிதர் என்ற பெருமை பெற்றவர் பிரபல தடகள வீரர் உசேன் போல்ட். உலகிலேயே அதிகவேகமாக ஓடக்கூடியவர் என்பதை அவர் பங்கேற்கும் போட்டிகளில் நிரூபித்து வருபவர்.

அவரை வெற்றி பெற யாராலும் முடியாது என்று கூறப்பட்டாலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் கேட்லின் முயற்சித்தால் போல்ட் சாதனையை எளிதில் முறியடிக்கலாம் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏனேனில் கடந்த ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற கேட்லின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நூலிழையில் உசைன் போல்டிடம் வெற்றியை பறிகொடுத்தார்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்காக தீவிர பயிற்சியில் ஜஸ்டின் கேட்லின் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் உசேன் போல்ட்டை வீழ்த்தி சாதனை படைப்பேன் என்று ஜஸ்டின் கேட்லின் சவால் விடுத்துள்ளார். உசேன் போல்ட்டை வீழ்த்திய பின்னர் பெறும் பதக்கத்தை அணிந்து கொண்டு அமெரிக்கா முழுவதும் சுற்றி வருவேன் என்றும் ஜஸ்டின் கேட்லின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications