Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் என்னடான்னா பரவட்டும்கிறார்.. இவர் என்னடான்னா நடு ராத்திரியில் ஒர்க் அவுட் பண்றார்!

ஹைதராபாத்: பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவும், நடிகர் விஷ்ணு விஷாலும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் என்பது உலகுக்குத் தெரியும்.. இவர்கள் இருவரும் போட்டுள்ள டிவீட்டுகளை வைத்து பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

கொரோனாவால் எல்லாமே முடங்கிப் போயுள்ளது.. எல்லாத் துறையினரும் ஸ்தம்பித்துப் போயுள்ளனர். இதனால் வீட்டோடு முடங்கியுள்ளது வாழ்க்கை. இருந்தாலும் ஏதாவது செய்தபடி சமூக வலைதளங்கள் மூலமாக மக்களை சந்தித்து வருகின்றனர் பிரபலங்கள் ஒவ்வொருவரும்.

இந்த நிலையில் ஜுவாலா கட்டா ஒரு மெசேஜை டிவிட்டரில் போட்டுள்ளார். அதேபோல விஷ்ணு விஷால் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதைப் பற்றித்தான் இந்த செய்தி.

வீடியோ போட்ட ஜூவாலா கட்டா

முதலில் ஜூவாலா கட்டா பற்றிப் பார்ப்போம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜுவாலா கட்டா பேட்மிண்டன் அகாடமி ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது கொரோனா காரணமாக செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளார். வீட்டில்யே இருக்கும் அவர் சமீபத்தில் பாத்திரம் கழுவும் வீடியோ ஒன்றைப் போட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது இன்னொரு போட்டோவைப் போட்டுள்ளார்.

அன்பைப் பரப்புவோம்

படுக்கையில் சாய்ந்திருக்கும் படம் இது. கண்ணில் ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் அல்லது அமைதி. கையில் லவ் ஆல் என்று பச்சை குத்தியுள்ளார். பெரிய கண்ணாடியுடன் காணப்படும் ஜூவாலா கட்டா அன்பு பரவட்டும், அனைவரும் அன்புடன் இருங்கள் என்று இதில் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக மக்கள் மத்தியில் சோகம், இனம் புரியாத பயம் நிலவி வருகிறது. அவர்களுக்கு ஆறுதல் தருவது போல இது இருக்கிறது.

விஷ்ணு விஷாலின் ஒர்க் அவுட்

அப்படியே திரும்பி விஷ்ணு விஷால் பக்கம் வருவோம். அவரும் கிட்டத்தட்ட இதேசமயத்தில் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதாவது லேட் நைட் ஒர்க் அவுட் என்று அவர் போட்டுள்ளார். அதில் மொட்டை மாடியில் படு சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு ஒர்க்-அவுட் செய்த முடித்த போட்டோவைப் போட்டுள்ளார். அவரும் டல்லாகவே காணப்படுகிறார்.

எப்பத்தான் போகுமோ

எப்பத்தான் போகுமோ

இவர்கள் மட்டுமல்ல எல்லா விளையாட்டுத் துறையினரும், சினிமா துறையினரும் கூடத்தான் சோகமாக உள்ளனர். மக்கள் நிலைமை அதை விட மோசம்.. வீட்டுக்குள்ளும் அடங்கிக் கிடக்க முடியாமல், வெளியிலும் வர முடியாமல் எல்லோருமே விரக்தியாகவே உள்ளனர். எப்படா இந்த கொரோனாவைரஸ் போகும் என்று கேட்காத மனிதர்களே இல்லை.

Story first published: Thursday, April 9, 2020, 23:41 [IST]
Other articles published on Apr 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+