For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கமல்ஹாசன் செய்த சம்பவம்.. செஸ் உலகில் தமிழின் பெருமை.. ரசிகர்களை குதுகலப்படுத்திய காணொலி

சென்னை: 2022ஆம் ஆண்டு சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக தொடங்கியது.

இதில் 185 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று, பிறகு அவர்களின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த நிலையில், விழாவில் முக்கிய நிகழ்வாக கமல்ஹாசன் குரலில் பேசிய 3டி வீடியோ, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கமல் குரல்

கமல் குரல்

உலகத்திலேயே தமிழ் தான் மிகவும் பழமையான மொழி என்பதை உலகம் அறிய செய்யும் வகையில் கமல்சன் குரலில் காணொலி ஒன்று தயாரிக்கப்பட்டது. அதில் வெளிநாட்டு வீரர்களுக்கு புரியும் வகையில், வீடியோ முழுவதும் கமல்ஹாசன் ஆங்கிலத்தில் பேசி அசத்தி இருந்தார்.

தமிழின் பெருமை

தமிழின் பெருமை

தமிழ் மொழியே பேசுவது போல் அமைக்கப்பட்ட இந்த வீடியோவில் தமிழ் எப்போது தோன்றியது, தமிழ் எத்தனை எத்தனை அரசர்களை பார்த்தது, தமிழ்நாட்டு மக்களின் சிறப்பு, தமிழ்நாட்டு அரசர்களின் சிறப்பு உள்ளிட்டவை அடங்கிய முக்கோண பரிமானத்தில் வீடியோ மற்றும் லேசர் லைட்களால் ஆன காட்சிகள் இடம்பெற்றன.

தமிழர்கள் கலை அறிவியல்

தமிழர்கள் கலை அறிவியல்

மேலும், தமிழ் மன்னர்கள் எப்படி உலகையே கடல் கடந்து 10ஆம் நூற்றாண்டில் ஆண்டார்கள் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், பண்டைய தமிழர்கள் எப்படி அறிவியலை பயன்படுத்தி அணைகளை கட்டினார்கள், காலம் கடந்து நிற்கும் கோயில்களை கட்டினார்கள் என்பது குறித்து இந்த வீடியோவில் விளக்கம் தரப்பட்டது.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

மேலும், சுனாமியின் போது தமிர்நாடு எவ்வாறு பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டம் அதிலிருந்த எப்படி எழுந்த நின்றது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றன. இதன் மூலம் 185 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ் மற்றும் தமிழகத்தின் பெருமை குறித்து பறைசாற்றப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Thursday, July 28, 2022, 22:51 [IST]
Other articles published on Jul 28, 2022
English summary
Kamal Hassan voice over video on chess Olympiad ceremony attracts fans கமல்ஹாசன் செய்த சம்பவம்.. செஸ் உலகில் தமிழின் பெருமை.. ரசிகர்களை குதுகலப்படுத்திய காணொலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+