Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"முரட்டு சாதனைக்கு சொந்தக்காரர் ".. வட்டு எறிதலில்.. ஒலிம்பிக் சாம்பியனை விஞ்சிய கமல்ப்ரீத் கவுர்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர், வட்டு எறிதலில் தங்கப்பதக்கம் வெல்வதற்கான நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு முதல் பதக்கம் (வெள்ளி) பெற்றுக் கொடுக்க, நேற்று ஒரே நாளில் இரண்டு பதக்கங்கள் உறுதியானது.

குத்துச்சண்டையில் லோவ்லினா அரையிறுதிக்கு முன்னேறி வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அதேபோல், பேட்மிண்டனில் பி.வி.சிந்து, அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இன்று (ஜுலை.31) நிறைய போட்டிகள் நடைபெற உள்ளன.

64 மீட்டர் தூரம்

64 மீட்டர் தூரம்

அந்த வகையில் இந்திய ரசிகர்கள் பெருமை கொள்ளும் வகையில் முக்கியமான போட்டியாக அமைந்தது வட்டு எறிதல் போட்டி. இன்று நடைபெற்ற பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், குரூப் 'பி' யில், இடம் பெற்றிருந்த கமல்ப்ரீத் கவுர், சராசரியாக 64 மீட்டர் தூரம் வீசி, தனது பிரிவின் பட்டியலில் இரண்டாவது வீராங்கனையாக இடம் பிடித்தார். அதுமட்டுமின்றி, இறுதிப் போட்டிக்கும் முன்னேறி அசத்தினார். இவரது 64 மீட்டர் தூரம் என்பது, 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த குரோஷிய வீராங்கனை எடுத்த புள்ளிகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆகஸ்ட் 2ம் தேதி

ஆகஸ்ட் 2ம் தேதி

கமல்பிரீத் கவுர் தன்னுடைய முதல் சுற்றில் 60.29 மீட்டர் தூரம் வீசினார். பின்னர் இரண்டாவது சுற்றில் அப்படியே கியரை மாற்றிய கமல்ப்ரீத், 63.97 மீட்டர் வீசி மிரள வைத்தார். கடைசி மற்றும் மூன்றாவது வாய்ப்பில் இன்னும் ஒருபடி மேலே சென்று 64.00 மீட்டர் தூரம் வீசி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று வியக்க வைத்தார். பெண்கள் வட்டு எறிதலுக்கான இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 4:30 மணிக்கு நடைபெறுகிறது. அன்றைய தினம் இந்தியாவுக்கு நிச்சயம் கமல்ப்ரீத் கவுர் மெடல் வென்றுத் தருவார் என எதிர்பார்க்கலாம்.

விஞ்சிய கமல்ப்ரீத்

விஞ்சிய கமல்ப்ரீத்

குரூப் A மற்றும் குரூப் B-யில் மொத்தம் கலந்து கொண்ட 31 வீராங்கனைகளில், 64 மீட்டர் தூரம் வீசிய, இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிப் பெற்ற இரண்டே இரண்டு வீராங்கனைகளில் கமல்ப்ரீத் கவுரும் ஒருவர். ரியோ & லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற, குரோஷியாவின் சாண்ட்ரா பெர்கோவிச், 63.75 மீ மட்டுமே வீசியுள்ளார். இது, கமல்ப்ரீத் வீசிய தூரத்தை குறைவானதாகும்.

மெடல் உறுதி

மெடல் உறுதி

இவர் இதே வேகத்தில் விளையாடினால், இறுதிப் போட்டியில் இந்தியா நிச்சயம் மெடல் அடிக்கும் என்று உறுதி. இன்றைய நிலவரப்படி, கமல்ப்ரீத் வெள்ளிப்பதக்கத்துக்கு தகுதியானவர் ஆகிறார். இன்னும் கூடுதல் வலிமையுடன் செயல்பட்டால் தங்கப்பதக்கம் கூட வசமாகும் வாய்ப்புள்ளது. ஆனால், உண்மையில் கமல்ப்ரீத் சிறந்த செயல்பாடு இதுவல்ல. கவுர் இரண்டு முறை தேசிய சாதனையை முறியடித்துள்ளார். முதலில் ஃபெடரேஷன் கோப்பையில் 65 மீ தூரம் தாண்டிய முதல் இந்தியப் பெண்மணி எனும் பெருமையைப் பெற்றார். பின்னர் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் -4 இல் அவர் 66.59 மீட்டர் தூரம் வீசி சாதனைப் படைத்தார்.

Story first published: Saturday, July 31, 2021, 17:11 [IST]
Other articles published on Jul 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+