ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறை.. 1,500-meter நீச்சல் போட்டி.. தங்கம் வென்று சாதித்த முதல் பெண்
ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், நீச்சல் பிரிவில் ஆண்களுக்கு சவால் அளிக்கும் வகையில் அட்டகாசமாக தனது திறமையை வெளிப்படுத்தி தங்கம் வென்றுள்ளார் அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடெக்கி.
ஒலிம்பிக் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, சீனா இடையே பதக்கம் வெல்வதில் கடும் மோதல் நீடிக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை, பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தியா தனது அடுத்த மெடலுக்கான தேடலில் தீவிரமாக உள்ளது.

வரலாற்றில் முதன்முறை
இந்த நிலையில், பெண்களுக்கான 1,500-meter freestyle நீச்சல் போட்டிகள் இன்று நடைபெற்றன. ஒலிம்பிக் வரலாற்றில் பெண்களுக்கு என 1,500-meter freestyle நீச்சல் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இதனால் இந்த போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆண்கள், இந்த 1500 மீட்டர் நீச்சல் போட்டிகளில் ஒவ்வொரு ஒலிம்பிக்கில் பங்கேற்றாலும், பெண்கள் கலந்து கொள்வது இதுவே முதன்முறை.

200-meter freestyle
1,500-meter தூரத்தை 15 நிமிடங்கள் 37.34 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் அமெரிக்காவின் கேட்டி லெடெக்கி. 24 வயதான கேட்டி-க்கு, ஒலிம்பிக்கில் இதுவே முதல் தங்கப்பதக்கமாகும். அதுவும், இன்று காலை தான் அதிகம் எதிர்பார்த்த 200-meter freestyle போட்டியில் கேட்டி தோல்வி அடைந்து பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்.

புதிய சாதனை
இந்த தோல்விக்கு பிறகு அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடங்கிய 1,500-meter freestyle நீச்சல் போட்டியில், முதலிடம் பிடித்து தங்கம் வென்று, விட்டதைப் பிடித்திருக்கிறார். குறிப்பாக, ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறை நடந்த 1,500-meter freestyle நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை எனும் வரலாற்றையும் அவர் பதிவு செய்துள்ளார்.

ஒரு நொடி வித்தியாசம்
இப்போட்டியில் மற்றொரு அமெரிக்க வீராங்கனை எரிக்கா 15:41.41 நேரத்தில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். ஜெர்மனியின் சாரா 15:42.91 நேரத்தில் இலக்கை எட்டி வெண்கலப்பதக்கம் வென்றார். வெறும் 1 நொடி இடைவெளியில் அவர் வெள்ளிப்பதக்கத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications