4x1500 ரிலே போட்டி.. கென்ய அணி அபார ஓட்டம்... உலக சாதனை!
நஸ்ஸா, பஹாமஸ்: பஹாமஸின் நஸ்ஸா நகரில் நடந்து வரும் சர்வதேச தடகளப் போட்டியில், 4x1500 தொடர் ஓட்டப் போட்டியில் கென்ய ஆடவர் அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இதுவரை இருந்து வந்த உலக சாதனையை கென்ய அணி உடைத்துள்ளது. இந்த அணி 14 நிமிடங்கள் 22.22 விநாடிகளில் போட்டி தூரத்தைக் கடந்து புதிய சாதனை படைத்தது.
கென்ய அணியில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற அஸ்பெல் கிப்ரோப் இடம் பெற்றிருந்தார். இதற்கு முன்பு 14:36.23 என்ற நேரக் கணக்கில் இதே கென்யாவைச் சேர்ந்த அணிதான் கடந்த 2009 போட்டியில் உலக சாதனை படைத்திருந்தது. தற்போது தனது நாட்டு அணி படைத்த சாதனையையே கென்யா முறியடித்துள்ளது.
அமெரிக்கா 2வது இடத்தையும், எத்தியோப்பியா 3வது இடத்தையும் பிடித்தன.
Story first published: Monday, May 26, 2014, 12:06 [IST]
Other articles published on May 26, 2014


Click it and Unblock the Notifications