Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காவல் அதிகாரி முதல் ஒலிம்பிக் வரை புதிய வரலாறு படைத்த சாஜன் பிரகாஷ்..குவிந்து வரும் பாராட்டுக்கள்!

கேரளா: ஒலிம்பிக்கில் ஸ்விம்மிங் போட்டிக்காக பங்குபெறும் இந்தியாவின் முதல் வீரர் என்ற பெருமையை சாஜன் பிரகாஷ் பெற்றுள்ளார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி ஜப்பானின் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த தொடருக்கான ஏற்பாடுகளும், தகுதிச்சுற்று போட்டிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒலிம்பிக் 2021

ஒலிம்பிக் 2021

ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், வாள்வீச்சு, ஹாக்கி, ஜிம்னாஸ்டிக், கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், உள்ளிட்ட விளையாட்டுகளில் இருந்து இதுவரை மொத்தமாக 107 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

நீச்சல் போட்டி

நீச்சல் போட்டி

இதில் நீச்சல் போட்டிக்காக ஒலிம்பிக்கிற்கு முதல் முறையாக இந்தியர் ஒருவரும் தேர்வாகியுள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் இந்திய வீரர் சாஜன் பிரகாஷ் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஒரு நிமிடம் 56.38 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக்குக்கு நுழைய ஒரு நிமிடம் 56.48 வினாடிகளில் கடக்க வேண்டும். சாஜன் பிரகாஷ் அந்த இலக்குக்கு முன்பே தொட்டு ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றார்.

காவல் ஆய்வாளர்

காவல் ஆய்வாளர்

27 வயதான அவர் சாஜன் பிரகாஷ் கேரள மாநிலத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஆவார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள கேரள காவல் துறை, காவல் ஆய்வாளர் சாஜன் பிரகாஷ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளதை பெருமையுடன் கூறிகொள்கிறோம். இது தேசத்திற்கு மிகவும் பெருமையான தருணம் ஆகும் எனக்குறிப்பிட்டுள்ளது.

ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

இந்நிலையில் இதுகுறித்து மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட் போட்டுள்ளார். அதில், பாராட்டுக்கள் வீரரே!, உலகின் தலைசிறந்த போட்டிகளில் இந்தியர்கள் அதிகளவில் பங்குபெறுவதற்கான அறிகுறிகளாக இந்த அறிவிப்புகள் தெரிகிறது. நானும் சிறுவயதில் இருந்தே நீச்சல் அடிக்கின்றேன். ஆனால் அதில் சிறந்த விஷயமான 'பட்டர்ஃப்ளை ஸ்ட்ரோக்' இன்று வரை எனக்கு வரவில்லை. அதுகுறித்து யாராவது டிப்ஸ் கொடுங்கள் என வேடிக்கையாக கேட்டுள்ளார்.

Story first published: Tuesday, June 29, 2021, 16:07 [IST]
Other articles published on Jun 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+