Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KIWG 2026: கேலோ இந்தியா குளிர்கால போட்டி.. ஐஸ் ஹாக்கியில் இந்திய ராணுவ அணி சாம்பியன்

லடாக்: கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் (KIWG 2026) ஆண்களுக்கான ஐஸ் ஹாக்கி இறுதிப் போட்டியில், இந்திய ராணுவ அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. குடியரசு தினமான ஜனவரி 26, 2026 அன்று, லடாக்கின் லே நகரில் உள்ள NDS மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சண்டிகரின் அபாரமான போராட்டத்தை சமாளித்த இந்திய ராணுவ அணி 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்தது. போட்டி முடிய மூன்று நிமிடங்களே இருந்த நிலையில், ராணுவத்தின் வெற்றி கோல் ஒரு பரபரப்பான முடிவுக்கு வழிவகுத்தது.

KIWG 2026 லடாக் கட்டத்தில் ஒட்டுமொத்தப் போட்டிகளின் அணி சாம்பியன் பட்டத்தை ஹரியானா வென்றது; ஃ பிகர் மற்றும் பனிச் சறுக்கு பிரிவுகளில் பெற்ற நான்கு தங்கப் பதக்கங்கள் இதற்கு உதவியது. பதக்க அட்டவணையில், லடாக் (5 வெள்ளி), மகாராஷ்டிரா (3 வெள்ளி), தெலங்கானா (2 வெள்ளி) ஆகிய அணிகள் தலா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

சண்டிகரின் ஆண்கள் பனி ஹாக்கி அணி, சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், லடாக்கை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. KIWG 2025 இல் தான் பனி ஹாக்கி விளையாடத் தொடங்கிய சண்டிகர் அணி இறுதிப் போட்டிக்கு வந்தது. லீக் சுற்றில் ராணுவ அணியிடம் 10-1 எனத் தோற்றிருந்த நிலையிலும், இறுதிப் போட்டியில் இரண்டு கோல்கள் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்து போராடினர்.

5000 பேர் அமரக்கூடிய NDS மைதானம், கூரையுடன் நவீனமயமாக்கப்பட்டு, இறுதிப் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் முன்னதாகவே ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் பத்மா நாம்கைல் கோல் அடிக்க, பத்தாவது நிமிடத்தில் சேவாங் டோர்ஜே இரண்டாவது கோலை அடித்து ராணுவ அணி 2-0 என முன்னிலை பெற்றது. எனினும், சண்டிகர் மனம் தளரவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் கோல்கள் விழவில்லை.

இறுதி பகுதியில் சண்டிகர் அணி மூன்று நிமிடங்களுக்குள் இரண்டு கோல்களை அடித்து, ஆட்டத்தில் திரும்பியது. குருதேஜ் சிங் பட்டி கோல் அடிக்க, பின்னர் பிர்ஷாஹான்ஜித் சிங் கோலடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார். இந்த கோல் நீண்ட மறுஆய்வுக்குப் பின்னரே சண்டிகருக்கு வழங்கப்பட்டது. சண்டிகருக்கு ராணுவ அணி பதிலடி கொடுத்தது. சண்டிகரின்தற்காப்பு தளர்த்தப்பட்டபோது பத்மா நோர்பூ நீண்ட தூர கோலை அடித்து, ராணுவ அணியின் வெற்றியைப் பதிவு செய்தார்.

சண்டிகர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌரவ் ரஹேஜா, “நாங்கள் தான் வெற்றியாளர்கள். இது ஒரு அசாதாரண அனுபவம், எல்லாம் கடவுளின் அருளால் ஆனது. இந்த பயணம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அடுத்த முறை இன்னும் கடினமாக உழைப்போம், மாநில அளவில் மற்றும் அதற்கு அப்பாலும் கோப்பைகளுக்காகப் போராடுவோம்” என்று குறிப்பிட்டார்.

சமன் செய்யக் காரணமாக அமைந்த கோலை அடித்த பிர்ஷாஹான்ஜித், “கடந்த எட்டு ஆண்டுகளாக நான் இன்லைன் ஹாக்கி விளையாடி வருகிறேன். எனது பனிச்சறுக்கு, டிரைபிளிங் மற்றும் பக் கட்டுப்பாட்டுத் திறன்களில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. பனியில் நான் போட்டியிடும் இரண்டாவது ஆண்டுதான் இது. கடந்த ஆண்டு எங்கள் அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்தது, அப்போதிருந்து நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்று நான் உணர்கிறேன். அடுத்த ஆண்டு தங்கப் பதக்கத்திற்காக நிச்சயம் போட்டியிடுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ராணுவ அணிக்காக முதல் கோலை அடித்த பத்மா நாம்கைல், சண்டிகர் அணி 2-2 என சமன் செய்தபோது தங்கள் அணிக்கு அழுத்தம் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டார். "உண்மையைச் சொல்லப் போனால், அவர்கள் இவ்வளவு சிறப்பாக விளையாடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் மிக நன்றாக விளையாடினர், நாங்களும் எங்கள் சிறந்த நிலையில் இருக்கவில்லை. சண்டிகரின் இன்றைய ஆட்டத்திற்குப் பாராட்டுகள்" என்று கூறினார்.

NDS மைதானத்தில் குடியரசு தின நிகழ்வுகள் 2000 மீட்டர் ஷார்ட் ட்ராக் கலப்பு ரிலே ஹீட்ஸ்களுடன் தொடங்கின. சிறந்த வேகப் பனிச்சறுக்கு வீரர்கள் பங்கேற்ற ஆறு அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, முதல் மூன்று அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. மூன்று தங்கம் வெல்லும் வாய்ப்பில் நயனா ஸ்ரீ தல்லூரி (தெலங்கானா), ஸ்கர்மா சுல்டிம் (லடாக்), சச்சின் சிங் (ஹரியானா) போன்ற வீரர்கள் இருந்தனர். எனினும், தெலங்கானா மற்றும் தமிழ்நாடு அணிகள் தகுதி நீக்கம் செய்யப்பட, ஹரியானா கடைசி இடத்தைப் பிடித்தது.

இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா, லடாக் மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. இஷான் தர்வேகர், அன்வாயீ தேஷ்பாண்டே, சோஹன் தர்க்கர், ஷாலீன் பெர்னாண்டஸ் ஆகியோர் அடங்கிய மகாராஷ்டிரா அணி 3:22.47 விநாடிகளில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இதில் லடாக் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது (3:29.34 விநாடிகள்), கர்நாடகா அணி வெண்கலம் வென்றது.

பனிச்சறுக்கு போட்டி முடிவில், லடாக்கின் ஸ்கர்மா சுல்டிம் 1000m லாங் ட்ராக் மற்றும் பெண்கள் ரிலே பிரிவுகளில் தங்கம் உட்பட மொத்தம் நான்கு பதக்கங்களை (2 தங்கம், 2 வெள்ளி) வென்று அசத்தினார். மகாராஷ்டிராவின் இஷான் தர்வேகர் மற்றும் அன்வாயீ தேஷ்பாண்டே தலா மூன்று பதக்கங்களுடன் முடித்தனர். KIWG 2025 இல் ஹாட்ரிக் தங்கம் வென்ற நயனா, இம்முறை இரண்டு தனிநபர் தங்கங்களை வென்றார். ஹரியானாவைச் சேர்ந்த சச்சின் சிங்கும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.

Story first published: Tuesday, January 27, 2026, 15:53 [IST]
Other articles published on Jan 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+