Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடடா.. விராட் கோலி கேட்டது என்ன.. நம்மாளுங்க செஞ்சு வச்சிருக்கிறது என்ன.. செம காமெடி

மும்பை: ஒரு வீடியோ போட்டு கமெண்ட் பண்ணுங்கப்பான்னு விராட் கோலி கேட்டாலும் கேட்டார்.. நம்ம ரசிகக் கண்மணிகள் செமையாக காமெடி செய்துள்ளனர்.

விராட் கோலியும் வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார்.. மனைவி அனுஷ்காவும் ஷூட்டிங் போக முடியாமல் வீட்டோடு முடங்கிக் கிடக்கிறார். இதனால் இருவரும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது வீடியோ போடுவது, போட்டோ போடுவது என பொழுது போக்கிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ போட்டிருந்தார். அதில் தனது வீடியோவைப் போட்டு அதற்கு நல்ல கேப்ஷன் கொடுங்க பார்ப்போம் என்று ரசிகர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

View this post on Instagram

Caption this! 💭

A post shared by Virat Kohli (@virat.kohli) on

கோலி போட்ட வீடியோ

அது ஒரு டிரிக் ஷாட் வீடியோ.. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்களுக்கு சீரியஸாக அதற்குப் பதிலளிக்க விரும்பாமல் காமெடி செய்து கலகலப்பாக்கி விட்டனர் இன்ஸ்டாவையே. பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்த வீடியோவுக்கு நைஸ் எடிட் என்று பதிலளித்துள்ளார். ஆனால் பல ரசிகர்கள் விதம் விதமான காமெடி வீடியோக்களைப் போட்டு விராட் கோலியை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளனர்.

கொரோனா பிடிக்கும்

கொரோனா பிடிக்கும்

பவன் ராம் என்ற பிரபல யூடியூபர் போட்டுள்ள கமெண்ட் இது.. மாஸ்க் அணியாமல் வெளியில் சுற்றும் ஒவ்வொருவரையும் கொரோனா விரட்டி விரட்டிப் பிடிப்பது போல உள்ளது என்று சிந்திக்க வைக்கும் கமெண்ட்டைப் போட்டுள்ளார். பாலிவுட் நடிகர் குனால் கெமு, ரொம்ப டல்லா இருக்கீங்களா.. எழுந்து ஓட ஆரம்பிங்க என்று வித்தியாசமான கமெண்ட் போட்டுள்ளார்.

தலைதெறிக்க ஓட்டம்

தலைதெறிக்க ஓட்டம்

அதை விட செம காமெடி இதுதான். ஏடிஎஸ் என்ற பெயர் கொண்ட ஒருவர் பதில் வீடியோ போட்டுள்ளார். அதில் வேட்டி சட்டை போட்ட ஒருவர் படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார். எங்கு ஓடுகிறார்.. எதற்கு ஓடுகிறார் என்றே தெரியவில்லை. தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்தால் நிச்சயம் விராட் கோலி விழுந்து விழுந்து சிரித்திருப்பார் என்பது மட்டும் பளிச்சென நமக்குத் தெரிகிறது.

கிளம்புங்க கைப்புள்ள

கிளம்புங்க கைப்புள்ள

உலகெங்கும் கொரோனாவின் வெறியாட்டத்தால் வீரர்கள் முடங்கிப் போயுள்ளனர். விரைவில் வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கையில் காத்துள்ளனர். இந்த நிலையில் விராட் கோலியின் இந்த விடியோ அனைவரையும் சற்று ரிலாக்ஸ் ஆக்கியுள்ளது. என்ன ரசிகர்களே நீங்களும் போய் ஏதாவது கமெண்ட் போட்டீங்களா. . போடாட்டி போட்டுட்டு வாங்கப்பா.. வடிவேலு ஓடும் வீடியோ நிறைய இருக்கு.. எடுத்து விடுங்க மக்களே.

Story first published: Monday, June 8, 2020, 16:16 [IST]
Other articles published on Jun 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+