11 வருஷமா வளர்த்த நாய் செத்துப் போச்சு.. அனுஷ்கா, கோலி பெரும் சோகம்
டெல்லி: இந்திய கேப்டன் விராட் கோலி வீட்டில் வளர்த்து வந்த நாய் புரூனோ இறந்து போய் விட்டது. இதையடுத்து கோலியும், அவரது மனைவி அனுஷ்காவும் அதற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புரூனோ கடந்த 11 வருடமாக கோலி வீட்டில் செல்லப் பிராணியாக வளர்ந்து வந்தது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அது மரணத்தைத் தழுவியது. இதனால் கோலி குடும்பம் சோகமாகியுள்ளது.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் கோலியும், அனுஷ்காவும் புரூனோவுக்கு இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர். இது இப்போது வைரலாகியுள்ளது.
இதுதொடர்பாக கோலி போட்டுள்ள செய்தியில், அமைதியாக துயில் கொள் புரூனோ. 11 வருடமாக எங்களுடன் வாழ்ந்தாய். ஆனால் எங்களது வாழ்நாளின் அன்பை கொடுத்துள்ளாய். இப்போது இன்னும் சிறந்த இடத்திற்குச் சென்றுள்ளாய். கடவுள் உன் ஆத்மாவை சாந்தி அடையச் செய்யட்டும் என்று கூறியுள்ளார்.
அதேபோல அனுஷ்கா சர்மாவும் இரங்கல் தெரிவித்து போஸ்ட் போட்டுள்ளார். தற்போது புரூனோவுக்கு இரங்கல் தெரிவித்தது டிவிட்டரிலும் டிரெண்டாகியுள்ளது. பலர் கோலி தம்பதிக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆனால் பலரோ இப்படிப்பட்ட நேரத்தில் ரிப் புருனோவை டிரெண்டிங் செய்றாங்களே என்று கிண்டலும் அடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications