For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி! பிரக்ஞானந்தா, அர்ஜூன் தோல்வி

நியூயார்க் : உலக ரேபிட் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கோனேரி ஹம்பி சாம்பியன் பட்டம் பெற்றனர். ரேபிட் செஸ் எனப்படும் விரைவாக விளையாடும் செஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்திற்கான தொடர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் 15 நிமிடம் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடிகள் கூடுதலாக நேரம் அளிக்கப்படும். இதனால் பெரிய அளவில் யோசிக்கவே நேரம் இல்லாமல் வீரர்கள் மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்த வேண்டியது இருக்கும்.

chess koneru hampi world rapid chess championship praggnanandhaa

இந்தத் தொடரின் மகளிர் பிரிவின் இறுதிச்சுற்று இந்தியாவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி மற்றும் ஹரிக்கா துரோணவள்ளி உள்ளிட்ட வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தனர். இதில் 11 வது சுற்று ஆட்டத்தில் இந்தோனேசிய வீராங்கனை ஆயிரின் கரிஷ்மாவை கோனேரு ஹம்பி வீழ்த்தி எட்டரை புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

37 வயது வீராங்கனை ஆன ஹம்பி ஏற்கனவே இந்த தொடரில் 2019 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டன் வென்றிருந்தார். இந்த நிலையில் கோனேரு ஹம்பி பிரசவம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் பல்வேறு தொடர்களில் பங்கேற்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் செஸ் விளையாட்டில் களமிறங்கி சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

இதேபோன்று ஓபன் பிரிவில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, ரஷ்ய வீரர் வொல்டர் முர்சினுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெறும் தருவாயில் இருந்து சில தவறுகளை செய்த பிறகு தோல்வியை தழுவினார். இதேபோன்று மற்றொரு இந்திய விரோதமான அர்ஜுன் எர்ராசி டிரா பெற்றாலே போதுமானது என்ற நிலையில் இருந்த போது அவரும் தோல்வியை தழுவினார்.

இந்த தொடரில் உலக சாம்பியன் குகேஷ் பங்கேற்கவில்லை. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு கடுமையாக உழைத்ததால் அவர் இந்த தொடரில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார். இதேபோன்று ஐந்து முறை உலக செஸ்ட் ரேபிட் சாம்பியன் ஆன கார்ல்சன் ஜீன்ஸ் உடை அணிந்து வந்ததால் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 29, 2024, 8:06 [IST]
Other articles published on Dec 29, 2024
English summary
Koneru Hampi Wins world rapid chess championship title and Praggnanandhaa and Arjun lost உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி! பிரக்ஞானந்தா, அர்ஜூன் தோல்வி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+