For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக மகளிர் ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் - கோனேரு ஹம்பி வெற்றி

மாஸ்கோ : ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற உலக மகளிர் ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தன்னை எதிர்த்து விளையாடிய சீனாவின் லீ டிங்ஜியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி வென்றார்.

கடந்த 2017ல் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்த பட்டத்தை வென்ற நிலையில், தற்போது உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கோனேரு ஹம்பி பெற்றுள்ளார்.

மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி சீனாவின் லீ டிங்ஜியை எதிர்கொண்ட நிலையில், ஆட்டம் டை ஆனது. இதையடுத்து நடைபெற்ற டை பிரரேக் ஆட்டத்தில் வெற்றி பெற்று பதக்கத்தை கைவசப்படுத்தினார் ஹம்பி.

கோனேரு ஹம்பி வெற்றி

கோனேரு ஹம்பி வெற்றி

ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற உலக மகளிர் ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி வெற்றி பெற்று பட்டத்தை வென்றார்.

மறுபிரவேசத்தை வலிமையாக்கிய சாம்பியன்

மறுபிரவேசத்தை வலிமையாக்கிய சாம்பியன்

குழந்தை பேற்றிற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த ஹம்பி, தற்போது இந்த போட்டியில் வென்றதன்மூலம் தன்னுடைய மறுபிரவேசத்தை வலிமையாக்கியுள்ளார்.

சீன வீராங்கனையிடம் வெற்றி

சீன வீராங்கனையிடம் வெற்றி

மாஸ்கோவில் நடைபெற்ற மகளிர் போட்டியில் 12 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சீனாவின் லீ டிங்ஜியுடனான டை பிரேக்கில் வென்று சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார் ஹம்பி.

விஸ்வநாதன் ஆனந்திற்கு அடுத்த வெற்றி

விஸ்வநாதன் ஆனந்திற்கு அடுத்த வெற்றி

கடந்த 2017ல் உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வென்ற நிலையில், இந்த போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கோனேரு ஹம்பி தற்போது பெற்றுள்ளார்.

கோனேரு ஹம்பி பேட்டி

கோனேரு ஹம்பி பேட்டி

உலக மகளிர் ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி டைட்டிலை வென்ற கோனேரு ஹம்பி, தான் இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்றும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

துருக்கி வீராங்கனைக்கு வெண்கலம்

துருக்கி வீராங்கனைக்கு வெண்கலம்

இதையடுத்து சீனாவின் லீ டிங்ஜி வெள்ளிப் பதக்கத்தையும் துருக்கியின் எகடெரினா அடாலி வெண்கலத்தையும் வென்றுள்ளனர்.

மாக்னஸ் கார்ல்சன் வெற்றி

மாக்னஸ் கார்ல்சன் வெற்றி

ஆடவர் பிரிவில் நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சன் உலக ராபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

Story first published: Monday, December 30, 2019, 20:06 [IST]
Other articles published on Dec 30, 2019
English summary
Koneru Humpy Becomes Women's World Rapid Chess Champion
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+