For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனிநாடான பின் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற கொசாவோவுக்கு முதல் தங்கம்

By Mathi

ரியோடி ஜெனிரோ: செர்பியாவில் இருந்து பிரிந்து தனிநாடான பின்னர் முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்ற கொசாவோவுக்கு 52 கிலோ ஜூடோ போட்டியில் முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

யூகோஸ்லேவியாவுடன் இணைந்திருந்தது ஒரு பகுதி கொசாவோ. யூகோஸ்லேவியா உடைந்த போது கொசாவோவை செர்பியா தனது நாட்டின் ஒரு அங்கமாக்கிக் கொண்டது.

Kosovo wins its first independent Olympic medal ever

இதை ஏற்க மறுத்து கொசாவோ அல்பேனியர்கள் தனிநாட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ஐநா தலையிட 2008-ம் ஆண்டு கொசாவோ தனிநாடாக பிரகடனம் செய்யப்பட்டது. சர்வதேச சமூகமும் இதை அங்கீகரித்தது.

தனிநாடான பின்னர் முதல் முறையாக நடப்பு ரியோ ஒலிம்பிக்ஸில் கொசாவோ பங்கேற்றுள்ளது. இதில் 52 கிலோ பிரிவு ஜூடோ போட்டியில் அந்த நாட்டின் வீராங்கனை கெல்மண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

தங்கப் பதக்கம் வென்ற கெல்மண்டி ஆனந்தக் கண்ணீருடன், இந்த நாளுக்காகத்தான் 4 ஆண்டுகள் காத்திருந்தேன் என கூறினார். தனிநாடான பின்னர் ஒலிம்பிக்கில் முதல் முறையாக பங்கேற்று முதல் தங்கப் பதக்கத்தை பெற்றிருப்பதை கொசாவே நாடே கொண்டாடிவருகிறது.

Story first published: Monday, August 8, 2016, 8:46 [IST]
Other articles published on Aug 8, 2016
English summary
Majlinda Kelmendi gave Kosovo its first Olympic medal as an independent nation, snaring the gold in the women's judo 52kg division.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+