Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கும்கும் மோஹோத் வரலாற்று வெற்றி.. கடைசி அம்பில் தங்கம்.. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2வது வெற்றி

நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி வில்வித்தையில் மகளிர் ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் கும்கும் மோஹோத் ஷூட்-ஆஃபில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றிலேயே மகளிர் ரீகர்வ் தனிநபர் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

நகோயாவில் நடைபெற்ற தங்கப் பதக்கத்திற்கான பரபரப்பான இறுதி ஆட்டத்தில், இந்தியாவின் இளம் வீராங்கனை கும்கும் மோஹோத், தென் கொரியாவின் நட்சத்திர வீராங்கனையான யேஜின் ஓவை எதிர்கொண்டார். கொரிய வீராங்கனை 29-27 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றி 2-0 என முன்னிலை பெற்றார்.

Kumkum Mohod Wins Historic Gold Medal in Women s Recurve Individual Archery at Asian Games 2026

2வது செட்டில் இருவரும் அடுத்தடுத்து 10 புள்ளிகளை குவித்து 29-29 என சமநிலை அடைந்தனர் (3-1). 3வது செட்டில் அசுர ஆதிக்கம் செலுத்திய கும்கும், தொடர்ந்து மூன்று 10 புள்ளிகளை குவித்து 30-29 என செட்டைக் கைப்பற்றி போட்டியை 3-3 என சமநிலைக்கு கொண்டு வந்தார். 4வது செட்டில் கொரிய வீராங்கனை 28-27 என வென்று 5-3 என முன்னிலை பெற்றார்.

தோல்வியைத் தவிர்க்க 5வது செட்டை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய கும்கும், சிறிதும் பதற்றமடையாமல் தொடர்ந்து 10, 10, 10 என மூன்று 10 புள்ளிகளை குவித்து 30-28 என்ற கணக்கில் செட்டை வென்றார். இதனால் போட்டி 5-5 என சமநிலையாகி, வெற்றியாளரை தீர்மானிக்க கூடுதல் ஷூட்-ஆஃப் முறை கொண்டு வரப்பட்டது.

ஷூட்-ஆஃபில், முதலில் எய்த தென் கொரிய வீராங்கனை யேஜின் ஓ அழுத்தத்தில் 8 புள்ளிகள் மட்டுமே எடுத்தார். இந்தியா தங்கம் வெல்ல 9 புள்ளிகள் தேவை என்ற எளிய சூழல் இருந்த போதிலும், கும்கும் தனது திறமையால் அந்த கடைசி அம்பை மிகத் துல்லியமாக 10 புள்ளி வட்டத்திற்குள் செலுத்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தகுதி

இந்த வரலாற்று சிறப்புமிக்க தங்கப் பதக்க வெற்றியின் மூலம், கும்கும் மோஹோத் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே மகளிர் ரீகர்வ் அணிகள் பிரிவிலும் தங்கம் வென்றிருந்த கும்கும், தற்போது தனிநபர் பிரிவிலும் தங்கம் வென்று நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரட்டை தங்கம் வென்றவராக சாதனை படைத்துள்ளார்.

Story first published: Saturday, October 3, 2026, 7:42 [IST]
Other articles published on Oct 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+