ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை லலிதா பாபர் முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை சுதா சிங் பைனல் வாய்ப்பை இழந்தார்.
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில், 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் இன்று பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியின் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை லலிதா பாபர் கலந்து கொண்டார். 18 பேர் கொண்ட 2-வது பிரிவில் (ஹீட்-2) அவர் பங்கேற்றார்.

இப்போட்டியின் இறுதியில் 9 நிமிடம் 19:76 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த லலிதா பாபர், நான்காவது இடத்தைப் பிடித்தார். இரண்டு ஹீட்டிலும் சேர்ந்து 7-வது இடத்தை பிடித்ததால் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
30வது இடம் பிடித்த மற்றொரு வீராங்கனை சுதா சிங் இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார்