முத்தரப்பு தொடர் இன்று துவங்கியது-இலங்கை, நியூசி. மோதல்
கொழும்பு: முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று கொழும்பில் துவங்கியது. முதல் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் கொழும்பில் இன்று துவங்கியது. முதல் போட்டியில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகி்ன்றன.
இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தானை 3-2 என வீழ்த்தியது, சொந்த மண்ணில் விளையாடுவது போன்றவை இலங்கை அணிக்கு சாதகமாக இருக்கிறது. இதனால் மற்ற இரண்டு அணிகளுக்கும் இலங்கை கடும் சவால் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி வரும் 11ம் தேதி தனது முதல் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. 12ம் தேதி இலங்கையுடன் இரண்டாவது போட்டியில் விளையாடுகிறது.
இந்திய அணி தனது கடைசி இலங்கை தொடரின் போது ஒரு நாள் தொடரை 4-1 என சூப்பர் வெற்றி பெற்றது. இந்த தெம்புடன் நமது வீரர்கள் தொடரில் உற்சாகமாக களமிறங்க இருக்கிறார்கள். கடந்த தொடரின் போது கேப்டன் டோணி மூன்று அரைசதங்கள் உட்பட 256 ரன்கள் குவித்திருந்தார். இதனால் இம்முறையும் அவர் அசத்துவார் என எதிர்பார்க்கலாம்.
இந்திய அணி இத்தொடரை கைப்பற்றும் பட்சத்தில் ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் தென் ஆப்ரிக்காவை முந்தி முதலிடத்துக்கு முன்னேறும்.
இந்திய வீரர்கள் பயணம் பாதிப்பு...
இந் நிலையில் முத்தரப்பு தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, இன்று நடக்கும் கார்பரேட் தொடரின் பைனலுக்கு பின்னர் ஜெட் ஏர்வேஸ் மூலம் இலங்கை செல்ல தி்ட்டமிட்டிருந்தது.
ஆனால், இந்நிறுவனத்தின் பைலட்டுகளின் திடீர் போராட்டத்தால் இலங்கை செல்லும் அந்த விமானம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்களின் கொழும்பு பயணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை வேறு நிறுவன விமானம் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications