Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்.. இந்தப் புள்ளையப் பாருங்களேன்.. நடுவரைப் பார்த்து கண்ணடிக்குது!

ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் போட்டியில் ஒரு குசும்புத்தனம் அரங்கேயிருக்கிறது. எத்தனை பேர் இதைக் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆக பரவி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லாரி ஹெர்னான்டஸ். அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியிலேயே சின்னப் பொண்ணு இவர்தான். இவர் தனது போட்டியில் கலந்து கொண்டபோது, தனது சாகதத்தைத் தொடங்கும் முன்பு நடுவர்களைப் பார்த்து ஸ்டைலாக கண்ணடித்து கலக்கியுள்ளார்.

இந்த வீடியோவும், புகைப்படமும் தற்போது வைரல் ஆக பரவி வருகிறது. இது செம தில்லான, துணிச்சலான செயல் என்று பலரும் லாரியைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த வீராங்கனையின் சேட்டையை டிவிட்டரில் பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். அமெரிக்காவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையும் தனது கண்ணடிப்பால் கவர்ந்து இழுத்து விட்டார் இந்தக் குட்டிப் பெண்.

Story first published: Monday, August 15, 2016, 12:19 [IST]
Other articles published on Aug 15, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+