லிபியாவில் வங்கி வேனை வழிமறித்து துப்பாக்கி முனையில் ரூ300 கோடி கொள்ளை
திரிபோலி: லிபியால் வங்கி வேனை வழிமறித்து துப்பாக்கி முனையில் ரூ300 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிபியாவில் சிர்தே விமான நிலையத்துக்கு லிபியா நாட்டு பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்றது. அந்த வேன் விமான நிலையத்துக்குள் நுழைய முயன்றபோது 10 பேர் கொண்ட கும்பலால் வழிமறிக்கப்பட்டது.
பின்னர் வேனில் இருந்தவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இறக்கிவிட்டுவிட்டு வேனை கடத்திக் கொண்டு சென்றுவிட்டது. அந்த வேனில் சுமார் ரூ300 கோடி இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிர்தே விமான நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Story first published: Tuesday, October 29, 2013, 14:39 [IST]
Other articles published on Oct 29, 2013


Click it and Unblock the Notifications