Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தகர்ந்த நம்பிக்கை.. முதல் சுற்றில் வென்ற தமிழ்நாட்டின் பவானி தேவி.. 2வது சுற்றில் தோற்றது எப்படி?

டோக்கியோ: வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டின் பவானி தேவி முதல் சுற்றில் சிறப்பாக ஆடினாலும், இரண்டாது சுற்றில் மோசமாக ஆடி தோல்வி அடைந்துள்ளார்.முதல் சுற்றில் துனிஷியா வீராங்கனை நதியா பென் அசிசை வீழ்த்தியவர் அடுத்த சுற்றில் பிரான்ஸ் வீராங்கனையிடம் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.

ஒலிம்பிக் 2020 தொடரில் நான்காம் நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். டேபிள் டென்னிஸ், வில்வித்தை, டென்னிஸ் என்று பல்வேறு பிரிவுகளில் இன்று போட்டி நடக்க உள்ளது.

இந்த நிலையில் இன்று காலையிலேயே முதல் ஆட்டமாக வாள்வீச்சு பிரிவில் இந்திய வீராங்கனை பவானி தேவி கலந்து கொண்டார். பவானி தேவி தமிழ்நாட்டை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை ஆவார்.

சென்னை

சென்னை

இவரின் பூர்வீகம் சென்னை ஆகும். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு வாள்வீச்சு பெண்கள் பிரிவில் யாரும் தேர்வானது இல்லை என்ற மோசமான வரலாற்றை முறியடித்தது இவர்தான். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நன்றாக ஆடியதால் இவருக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைத்தது.

அதிரடி

அதிரடி

இந்த நிலையில் இன்று வாள்வீச்சு பெண்கள் பிரிவில் 64 சுற்று ஆட்டத்தில் கலந்து கொண்டார். அதாவது 64 பேர் மோதும் ஆட்டம் ஆகும் இது. இதில் வெற்றிபெறும் 32 பேர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். துனிஷியா வீராங்கனை நதியா பென் அசிசை இந்த 64வது சுற்று ஆட்டத்தில் பவானி தேவி எதிர்கொண்டார்.

கலக்கல்

கலக்கல்

இது கொஞ்சம் கடினமான ஆட்டம் ஆகும். இந்த சுற்றில் உடலில் எங்கு வேண்டுமானாலும் வாள் மூலம் குத்த முடியும். வயிற்றுக்கு மேல் மட்டுமே குத்த வேண்டும். முதல் 15 புள்ளிகள் எடுக்கும் நபர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

முன்னேற்றம்

முன்னேற்றம்

இதன் மூலம் மொத்தமாக 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் பவானி தேவி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தற்போது 32 வீராங்கனைகள் கொண்ட சுற்றுக்கு அவர் முன்னேறினார். பிரான்சின் மனோன் ப்ருநட்டை இவர் அடுத்த சுற்றில் எதிர்கொண்டார். ஆனால் இந்த சுற்றில் பவானியிடம் அந்த வேகம் இல்லை.

முதல் போட்டி

முதல் போட்டி

இதில் முதல் போட்டியில் தொடக்கத்தில் இருந்தே பவானி தேவி ஆதிக்கம் செலுத்தினார். முதல் எட்டு புள்ளிகள் வரை பவானி தேவி கட்டுப்பாட்டில்தான் முழு போட்டியும் இருந்தது. பவானி தேவி 9வது புள்ளி எடுத்த போதுதான் நதியா பென் அசிஸ் தனது முதல் புள்ளியை பெற்றார்.

மனோன் ப்ருநட்

மனோன் ப்ருநட்

பிரான்சின் மனோன் ப்ருநட் உலகின் நம்பர் 3 வீராங்கனை ஆவார். அவர் தொடக்கத்தில் இருந்தே பவானி தேவியை எதிர்பாராத இடங்களில் அட்டாக் செய்து அதிர்ச்சி கொடுத்தார். முதல் 11 புள்ளிகள் வரை பவானி தேவி எதுவும் செய்ய முடியாமல் திணறிப்போனார்.

தோல்வி

தோல்வி

அதன்பின் புள்ளிகள் எடுக்க தொடங்கிய பவானி தேவி வேகமாக 7 புள்ளிகள் வரை வந்தார். ஆனால் இன்னொரு பக்கம் பிரான்சின் மனோன் ப்ருநட் 15 புள்ளிகளை எடுத்தார். முதலில் 15 எடுப்பவர்தான் வெற்றிபெற்றவர் என்பதால் பவானி தேவியை வீழ்த்தி மனோன் ப்ருநட் வெற்றிபெற்றார்.

Story first published: Monday, July 26, 2021, 11:06 [IST]
Other articles published on Jul 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+