ஒலிம்பிக் நீச்சல் பிரிவில்.. தேர்வான முதல் இந்திய வீராங்கனை - புதிய வரலாற்று சாதனை
மும்பை: டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தகுதிப் பெற்ற முதல் பெண் மற்றும் மூன்றாவது நீச்சல் வீரர் என்ற பெருமையை மானா படேல் பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கிக் கொண்டே இருக்கின்றன. இம்முறை இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் பிரிவில் தகுதிப் பெறும் முதல் இந்திய வீராங்கனை எனும் சாதனையை படைத்திருக்கிறார் மானா படேல்.

தங்கப் பதக்கங்கள்
மானா படேல் அகமதாபாத்தைச் சேர்ந்த பேக்ஸ்ட்ரோக் (Backstroke) நீச்சல் வீரர். 21 வயதான மானா படேல் 50 மற்றும் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தேசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். 60வது தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் (2015) 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தங்கம் வென்றுள்ளார்.

அனைத்திலும் வெற்றி
மூன்று ஆண்டுகளுக்குப் முன் 2018ல், 72 வது சீனியர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் மூன்று தங்கப் பதக்கங்களை அள்ளிக் கொண்டு வந்தார். அதே 2018ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடந்த சீனியர் தேசிய போட்டிகளில் படேல் கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் பதக்கங்கள் வென்றார்.

முதல் வீராங்கனை
இந்நிலையில், தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மானா படேல் தேர்வாகி இருக்கிறார். ஏற்கனவே ஸ்ரீஹரி நடராஜ் மற்றும் சஜன் பிரகாஷ் ஆகிய நீச்சல் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெற்று உள்ளனர். இதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றில், நீச்சல் பிரிவில் இந்தியாவில் இருந்து பங்கு பெறும் முதல் வீராங்கனை எனும் சாதனையை படைத்திருக்கிறார்.

Universality Quota
இதையடுத்து, மானா படேலுக்கு மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "பேக்ஸ்ட்ரோக் நீச்சல் வீரர் மானா படேல் டோக்கியோ 2020க்கு தகுதி பெற்ற முதல் பெண் மற்றும் 3 வது இந்திய நீச்சல் வீரராகிறார். அவர் Universality Quota மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்" என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications