
ரேவதி தேர்வு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தடகளம், வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப்படகு உள்ளிட்ட போட்டிகளுக்காக தமிழகத்தை சேர்ந்த 8 வீரர்கள் தகுதிப்பெற்றிருந்தனர். இந்நிலையில் தற்போது மேலும் 4 வீரர்கள் தகுதிப்பெற்றுள்ளனர். இதில் தடகள போட்டிக்காக தேர்வாகியுள்ள வீராங்கனை ரேவதியின் கதை சக இளைஞர்களுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.

தகுதிச்சுற்று போட்டி
மதுரையை சேர்ந்த ரேவதி, ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் மாநில, தேசிய போட்டிகளில் பதக்கங்களை குவித்தவர் ஆவார். இவர் கடந்த ஜூன் 4ம் தேதி நடந்த தகுதிச்சுற்றில் 400 மீட்டர் இலக்கை 53. 55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் 4 x 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.

நெகிழ்ந்த ரேவதி
இதுகுறித்து பேசியுள்ள ரேவதி, எனக்கு தாய், தந்தை இல்லை. நான், மிகவும் கஷ்டமான குடும்பச் சூழலால் பாட்டி என்னைச் சிறுவயதிலேயே விடுதியில் சேர்த்துவிட்டார். 12ஆம் வகுப்பு படித்த போது மதுரையில் நடந்த ஆடிஷனில் கலந்துகொண்டேன். அப்போது அணிந்துக்கொள்ள ஷு கூட இல்லாமல் வெறும் காலில் ஓடுவதைப் பார்த்த பயிற்சியாளர் கண்ணன் எனக்குப் பயிற்சி அளிப்பதாகக் கூறினார். அவர் இலவச விடுதி வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

அடிபட்டு வந்தேன்
பிறகு தேசிய அளவிலான ஜூனியர், சீனியர் போட்டிகளில் வெற்றிபெற்றதால், பாட்டியாலாவில் உள்ள கேம்ப்பில் பயிற்சிபெறும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ஆசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன். எனக்கு முழங்காலில் அடிப்பட்டுச் சிரமப்பட்ட போதும், அதிலிருந்து மீண்டுவரப் பயிற்சியாளர்களும் எனது பாட்டியும் உதவிசெய்து, என்னைப் போட்டிகளில் பங்கேற்க ஊக்கப்படுத்தினர். தற்போது காயத்திலிருந்து மீண்டுவந்து ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வாகியுள்ளேன் என உணர்ச்சிப்பொங்க கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











