Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி இந்தியாவுக்காக ஆட மாட்டேன்-மகேஷ் பூபதி

கொல்கத்தா:

Bhupathi with Sania Mirsa

பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி இனிமேல் இந்தியாவுக்காக விளையாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

விஜய் அமிர்தராஜுக்குப் பின்னர் இந்திய டென்னிஸை சர்வதேச அரங்கில் பீடு நடைபோட வைத்த பெருமை லியாண்டர் பயஸுக்கும், மகேஷ் பூபதிக்கும் உண்டு.இருவரும் இணைந்து இரட்டையர் டென்னிஸில் நம்பர் ஒன் இடத்தில் கோலோச்சிவந்தனர். முன்னணி வீரர்களை மிரட்டி வந்தனர்.

இருவரும் இணைந்து விளையாடிய இரட்டையர் போட்டிகளில் தோல்வியை விடவெற்றிகளே அதிகம். இந் நிலையில் இருவரும் சேர்ந்து விளையாடுவதை சமீபத்தில்நிறுத்தி விட்டனர்.

இந் நிலையில்தான் இனிமேல் இந்தியாவுக்காக ஆடப் போவதில்லை என்று மகேஷ்பூபதி அறிவித்துள்ளார். இதனால் டென்னிஸ் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

இனிமேல் நமது நாட்டுக்காக நான் டென்னிஸ் ஆடுவது என்பது இயலாது எனகருதுகிறேன்.

லியாண்டர் பயஸுடன் சேர்ந்து விளையாடுவது குறித்து பேசினேன். ஆனால்ஒலிம்பிக்ஸ் வரை இருவரும் சேர்ந்து விளையாட முடியாத நிலை உள்ளது.இதையடுத்து எனது குடும்பம், எனது தந்தை, மனைவி மற்றும்நெருக்கமானவர்களுடன் விவாதித்து இந்த முடிவுக்கு வந்தேன்.

இன்னும் இரு வாரத்தில் இதுதொடர்பாக இறுதி முடிவெடுத்து அறிவிக்கவுள்ளேன்என்று கூறியுள்ளார் பூபதி.

இதன் மூலம் டேவிஸ் கோப்பை, ஆசிய விளையாட்டு, 2008 ஒலிம்பிக்ஸ் ஆகியபோட்டிகளில் இந்தியாவுக்காக பூபதி விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

தன்னுடன் இணைந்து ஆட லியாண்டர் பயஸ் மறுத்து விட்டதாலும், தன்னுடன்ஆடுவதாக இருந்த சானியா மிர்ஸா, லியாண்டருடன் சேர்ந்து ஆட முடிவுசெய்ததாலும்தான் இந்த முடிவுக்கு மகேஷ் பூபதி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மகேஷ் பூபதியின் இந்த முடிவினால் லியாண்டர் பயஸ்- மகேஷ் பூபதி ஜோடிஇனிமேல் ஒன்று சேராது என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவின் வெற்றிகரமான இரட்டையர் டென்னிஸ் ஜோடியாக விளங்கியபயஸும், பூபதியும் சேர்ந்து, கிட்டத்தட்ட அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும்பட்டம் வென்றுள்ளனர்.

பூபதி தன் வசம் 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வைத்துள்ளார். லியாண்டர் 7பட்டங்களை வென்றுள்ளார். தற்போது இரட்டையர் போட்டியில் லியாண்டர், செக்வீரர் மார்ட்டினுடன் இணைந்து ஆடி வருகிறார். பூபதி, குரோஷிய வீரர் மரியோஅக்னிக்குடன் இணைந்து ஆடி வருகிறார்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:49 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+