Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியின் கேப்டனான முதல் தமிழர்... வரலாற்று சாதனை.. தேசியக்கொடியை ஏந்திச்செல்ல தேர்வு!

டெல்லி: டோக்கியோ பாராலிம்பிக்கில், இந்திய தேசிய கொடியை ஏந்தி வரும் பெருமை தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்க வேலுவுக்கு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது.

இதே போல பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கேப்டன்

கேப்டன்

மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக மாரியப்பன் தங்கவேலு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணிவகுப்பின்போது இவர்தான் தேசியக் கொடியை ஏந்தி வருவார் எனத் தேசிய பாராஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

 முதல் தமிழன்

முதல் தமிழன்

ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பாக தேசியக் கொடியை ஏந்தப்போகும் முதல் தமிழர் என்ற பெருமையை மாரியப்பன் தங்க வேலு பெற்றுள்ளார். 2016ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு, 1.8 மீட்டர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருந்தார்.

நன்றிகள்

நன்றிகள்

ஒலிம்பிக் கமிட்டியின் அறிவிப்பு குறித்து பேசியுள்ள மாரியப்பன், என்னை கேப்டனாக தேர்வு செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக எனது பயிற்சியாளர் சத்யநாரயணன் மற்றும் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் 1.86மீ பிரிவில் நான் தேர்வாகியுள்ளேன். நிச்சயம் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கம் வெல்வேன் என உறுதியளித்துள்ளார்.

மன வலிமை

மன வலிமை

சேலம் மாவட்டம் பெரியவடகம் பட்டியில் பிறந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு 5 வயது இருக்கும் போது விபத்தில் கால் நிரந்தர ஊனமானது. இருப்பினும், மன தைரியத்துடன் போராடிய மாரியப்பன் தங்கவேலு, சர்வதேச அளவில் அடுத்தடுத்து பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

Story first published: Sunday, July 4, 2021, 13:16 [IST]
Other articles published on Jul 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+