மரண மாஸ்! 8 ஆண்டுகளில் முதல் தங்கம்.. உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மாரியப்பன் தங்கவேலு சாதனை!
டோக்யோ : ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் 8 ஆண்டுகளில் மாரியப்பன் தங்கவேல் பெரிய தொடர்களின் தங்கப் பதக்கத்தை தட்டி சென்றிருக்கிறார்.
ஜப்பானில் நடைபெற்ற இந்த தொடரில் உயரம் தாண்டுதல் டி 63 பிரிவில் மாரியப்பன் பங்கேற்றார். இவர் ஒரு புள்ளி 8 8 மீட்டர் உயரம் தாண்டி முதல் இடத்தை பிடித்தார். இதன் மூலம் 28 வயதான மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.

மாரியப்பன் தங்கவேல் கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ பாரரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்க பதக்கத்தை வென்றார். இதன் பிறகு 2021 பாரா ஒலிம்பிக் போட்டியில் டி63 பிரிவில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டிகளில் டி63 பிரிவில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இந்த பிரிவில் அமெரிக்க வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றனர். சேலம் மாவட்டத்தில் பிறந்த தங்கவேலு மாரியப்பன் சிறு வயதில் பள்ளிக்கு சென்ற போது பேருந்து ஓட்டுனர் ஒருவரின் கவனக்குறைவால் விபத்தில் சிக்கி தன்னுடைய காலை மாரியப்பன் இழந்தார்.மாரியப்பனின் தந்தை தன்னுடைய குடும்பத்தை பாதியில் விட்டு சென்ற நிலையில் அவருடைய தாய் தான் தின கூலிக்கு வேலைக்கு சென்று மாரியப்பனை வளர்த்தெடுத்தார்.
மாரியப்பன் தங்கவேல் உடலில் குறை இருந்தாலும் குடும்ப கஷ்டம் இருந்தாலும் அதையெல்லாம் உடைத்து சாதனை படைத்தார்.இந்த நிலையில் மீண்டும் அவர் பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் ஐந்தாம் நாளில் இந்தியா ஒரே நாளில் ஐந்து பதக்கத்தை வென்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக நான்கு தங்கம், நான்கு வெள்ளி, இரண்டு வெண்கலம் என பத்து பதக்கங்களை கைப்பற்றிய இந்திய அணி தற்போது பதக்கப்பட்டுகளில் மூன்றாவது இடத்தில் பிடித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications