தமிழக அரசின் ஊக்கத்தால் பதக்கம் வெல்ல முடிந்தது- 'தங்க மகன்' மாரியப்பன் நெகிழ்ச்சி!
ரியோ: தமிழக அரசு கொடுத்த ஊக்கத்தால்தான் தங்கப் பதக்கம் வெல்ல முடிந்தது என்று மாரியப்பன் தங்கவேலு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று சரித்திரம் படைத்துள்ளார்.

ரூ2 கோடி பரிசு
தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ2 கோடி பரிசு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

குவியும் வாழ்த்துகள்
அத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களும் மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமிதாப்பச்சன், சூர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசின் ஊக்கம்தான்...
தாம் பதக்கம் வென்றது குறித்து ரியோவில் இருந்து மாரியப்பன் கூறியதாவது: தமிழக அரசின் ஊக்கத்தால்தான் என்னால் பதக்கம் வெல்ல முடிந்தது.

மகிழ்ச்சி
நான் பதக்கம் வெல்வதற்காக ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி. தமிழக அரசு ரூ2 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு மாரியப்பன் கூறினார்.


Click it and Unblock the Notifications