காதலிக்கு பப்ளிக்காக "புரபோஸ்" செய்த மார்ட்டினா நவ்ரத்திலோவா!
நியூயார்க்: டென்னிஸ் ஜாம்பவானும், தான் ஒரு லெஸ்பியன் என்பதை பகிரங்கமாக அறிவித்தவருமான மார்ட்டினா நவ்ரத்திலோவா, தனது நீண்ட நாள் காதலியான ஜூலியா லெமிகோவாவுக்கு பகிரங்கமாக திருமண புரபோசலைத் தெரிவித்துக் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
டென்னிஸ் உலகின் ஜாம்பவான் வீராங்கனையாக திகழ்ந்தவர் மார்ட்டினா. 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 167 டூர் சாம்பியன் பட்டங்களையும் வென்ற ஜாம்பவான்.
பழம்பெரும் வீராங்கனை கிறிஸ் எவர்ட்டுக்கு நிகரான பிரபலம் பெற்றவர். இவர் ஒரு லெஸ்பியன்.

காதலி ஜூலியா
ஜூலியா லெமிகோவாவும், மார்ட்டினாவும் நீண்ட நாட்களாக காதலர்களாக வலம் வந்து கொண்டுள்ளனர்.

57 வயது மார்ட்டினா
மார்ட்டினாவுக்கு 57 வயதாகிறது. இந்த நிலையில் ஜூலியாவுக்கு திருமண புரபோசல் கொடுத்துள்ளார் மார்ட்டினா. அதுவும் பகிரங்கமாக.

முழங்காலிட்டு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் வர்னணைக்காக வந்த இடத்தில் ஜூலியா முன்பு முழங்காலிட்டு அமர்ந்து புரபோஸ் செய்தார் மார்ட்டினா. அதைப் பார்த்து வெட்கப் புன்னகையுடன் எஸ் என்று கூறி ஏற்றுக் கொண்டார் ஜூலியா.

பதட்டமாக இருந்தது
இதுகுறித்து மார்ட்டினா கூறுகையில், சற்று பதட்டமாகத்தான் இருந்தது. ஆனால் ஜூலியா எஸ் என்று சொன்னதும் உற்சமாகி விட்டது என்றார்.

எல்லோருக்கும் நடப்பது எனக்கும் நடந்தது
மேலும் அவர் கூறுகையில், எல்லோருக்கும் நடப்பதுதான் இது. எனக்கும் அது நடந்துள்ளது. ரொம்ப அழகான காதல் இது என்றார் மார்ட்டினா.

டிவிட்டில் மகிழ்ச்சி
பின்னர் மார்ட்டினா வெளியிட்ட ஒரு டிவிட் செய்தியில், எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். ஜூலியாவும்தான் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications