Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"என்ன நடந்துச்சுன்னே புரியல".. மேரிகோம் தோல்வி பின்னணி.. 'ஸ்கோரிங் முறை' குறித்து சர்ச்சை

ஜப்பான்: ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் தோல்வி பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம், டோக்கியோ ஒலிம்பிக்கில் பிளைவெயிட் பிரிவு முதல் சுற்றில் டோமினிகா குடியரசு வீராங்கனை மிக்லினா கார்ஸியாவுடன் நடந்த போட்டியில் 4 -1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி நடைபெற்றது. இதில் மேரி கோம், கொலம்பியா வீராங்கனை இங்கிரிட் வெலன்சியாவை எதிர்த்து போட்டியிட்டார்.

 அடுத்தடுத்து வெற்றி

அடுத்தடுத்து வெற்றி

தொடக்கத்தில் இங்கிரிட்டின் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், முதல் சுற்றில் 4 - 1 என்ற கணக்கில் மேரி கோம் பின்தங்கினார். பின்னர் 2வது சுற்றை 3-2 என்ற கணக்கில் மேரி கோம் கைப்பற்றினார். தொடர்ந்து மூன்றாவது மற்றும் கடைசி சுற்றையும் மேரி கோம் கைப்பற்றினார். 3வது சுற்றின் முடிவில் 3 - 2 என்ற கணக்கில் வென்றார்.

 காலிறுதி வாய்ப்பு

காலிறுதி வாய்ப்பு

ஆட்டத்தின் 2 சுற்றுகளை வென்ற போதும் மேரிகோமுக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. மேரி கோம் கைப்பற்றிய 2 சுற்றுகளின் புள்ளி வித்தியாசங்கள் 3 -2, 3 - 2 ஆகும். ஆனால் முதல் சுற்றில் கொலம்பியா வீராங்கனை வென்ற புள்ளி வித்தியாசம் 1 - 4 ஆகும். எனவே புள்ளி வித்தியாச அளவை வைத்து கணக்கிடும் போது, இந்த போட்டியில் மேரி கோம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், அவர் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிபோனது.

 புரியவில்லை

புரியவில்லை

போட்டி முடிந்த பிறகு பேசிய மேரி கோம், "என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, முதல் சுற்றுக்கு பிறகு, நாங்கள் இருவரும் எங்கள் உத்திகளைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம். பிறகு நான் அடுத்த சுற்றையும் வென்றேன் என்று கூறினார். பிறகு பேசிய மேரி கோம் பயிற்சியாளர் லால் தேவ், "இந்த scoring முறை எனக்கு புரியவில்லை. இதில் எங்களுக்கு பெரும் ஏமாற்றம் தான். இதில் அதிர்ஷ்டம் இல்லை என்றே நினைக்கிறேன்" என்றார்.

 20 ஆண்டுகளாக

20 ஆண்டுகளாக

தொடர்ந்து பேசிய மேரி கோம், "நான் இன்னும் போராட முடியும், நான் இன்னும் போதுமான பலத்துடன் இருக்கிறேன். நிச்சயமாக பயிற்சியும் ஒழுக்கமும் முக்கியம். நான் 20 ஆண்டுகளாக குத்துச்சண்டையில் இருக்கிறேன். இன்னமும் தொடர்ந்து என்னால் சிறப்பாக விளையாட முடியும்" என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, July 29, 2021, 18:18 [IST]
Other articles published on Jul 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+