என்னை கட்டாயப்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபடுத்தியவர் சல்மான் பட்தான்-ஆமிர் அதிரடி

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி விட்டாராம் ஆமிர். வேண்டும் என்றே தன்னை நோ பால் போடுமாறு வற்புறுத்தியவர் கேப்டன் பட்தான் என்று கூறியுள்ள ஆமிர், அணியின் மூத்தவரான பட்டை மீறி தன்னால் செயல்பட முடியவில்லை என்றும் கூறியுள்லார்.
பட் போல அணியின் பிற மூத்தவர்களும் கூட இதுபோல கட்டாயப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆமிரின் இந்த புதிய வாக்குமூலத்தைத் தொடர்ந்து அவரை மீண்டும் விசாரிக்க ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக பிடிபட்டு சஸ்பெண்ட் ஆனவர்கள் சல்மான் பட், ஆமிர், ஆசிப் ஆகியோர் என்பது நினைவிருக்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications