Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பரபரப்பான சேஸிங்".. கடைசி நொடி வரை போராட்டம் - நூலிழையில் வெற்றியை விட்ட அட்டானு தாஸ்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கு மற்றொரு சோகமான செய்தி இது. வில்வித்தையில் இருந்து அட்டானு தாஸ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், இந்தியா சார்பில் மெடல் வெல்லும் வாய்ப்பு அதிகம் இருந்த வீரர்களில் ஒருவர் அட்டானு தாஸ்.

வில்வித்தையில் சிறப்பாக விளையாடிய அட்டானு தாஸ், காலிறுதிக்கு முந்தைய போட்டி வரை முன்னேறி இருந்தார். எப்படியும் ஏதாவது ஒரு மெடல் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 2-0 என முன்னிலை

2-0 என முன்னிலை

இந்த நிலையில், இன்று (ஜுலை.31) இந்தியாவின் அட்டானு தாஸ் மற்றும் ஜப்பானின் ஃபுருக்காவா ஆகியோர் வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் (1/8 Eliminations) களமிறங்கினர். இதில் முதல் சுற்றில் 27-25 என்ற ஜப்பான் வீரர் வென்று 2-0 என முன்னிலை வகித்தார்.

 ஆட்டம் சமநிலை

ஆட்டம் சமநிலை

தொடர்ந்து, 2வது சுற்று 28-28 என டிராவானது. இதனால் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. அப்போதும், ஜப்பான் வீரர் 3-1 என்று முன்னிலையில் இருந்தார். பிறகு 3வது சுற்றை அட்டானு தாஸ் 28-27 என்று கைப்பற்ற 3-3 என்ற கணக்கில் ஆட்டம் சமநிலை பெற்றது. மீண்டும் நான்காவது சுற்றும் 28-28 என்று டிராவானது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் இறுதிச் சுற்று நடைபெற்றது.

 வெளியேறிய அட்டானு தாஸ்

வெளியேறிய அட்டானு தாஸ்

இதில், அட்டானு தாஸை விட ஜஸ்ட் 1 புள்ளி அதிகம் பெற்று ஜப்பான் வீரர் 27-26 என வெற்றிப் பெற்றார். இதனால், ஒட்டுமொத்த புள்ளி அடிப்படையில், 6-4 என்ற விகிதத்தில் ஜப்பான் வீரர் வெற்றிப் பெற்றார். 27-25, 28-28, 27-28, 28-28, 27-26 என்ற கணக்கில் அட்டானு தாஸ் தோல்வி அடைந்தார். கடைசி வரை போராடிய அட்டானு தாஸ், வில்வித்தை போட்டியில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேற நேரிட்டது. முன்னதாக, அட்டானு தாஸ் மனைவியும், வில்வித்தை வீராங்கனையுமா பூஜா குமாரியும், பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய நிலையில், கணவர் அட்டானு தாஸும் ஒற்றையர் சுற்றில் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறுகிறார்.

 மனைவியும் வெளியேற்றம்

மனைவியும் வெளியேற்றம்

முன்னதாக, சுற்றுப் போட்டிகளில் அட்டானு தாஸின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மனைவி தீபிகா குமாரி தான். இதுகுறித்து பேசிய அட்டானு தாஸ், "தீபிகாவை என் மனைவியாக பெற்றது நான் செய்த பாக்கியம். அவரது வார்த்தைகள் எனக்கு ஒரு பெரிய ஆதரவும் ஊக்கமும் அளித்தது. தயவுசெய்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். தயவுசெய்து எங்களை ஊக்குவியுங்கள். எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவை" என்று தெரிவித்திருந்த நிலையில், இப்போது இருவருமே தொடரை விட்டு வெளியேறியது உண்மையில் இந்தியாவுக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் ஏமாற்றமே!.

Story first published: Saturday, July 31, 2021, 9:53 [IST]
Other articles published on Jul 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+