பவுன்சருக்கு பலியான பிலிப் ஹியூக்ஸின் 26வது பிறந்நதாள் இன்று: மைக்கேல் கிளார்க் புகழாரம்
சிட்னி: தலையில் பந்து பட்டு படுகாயம் அடைந்து உயிர் இழந்த ஆஸ்திரலேய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தன்னுடன் பிறவாத தம்பி என அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியே கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்துபட்டதில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 2 நாட்கள் பிறகு சிகிச்சை பலனின்றி பலியானார். அவரது மரணத்தால் கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிலிப் ஹியூக்ஸின் 26வது பிறந்தநாள் இன்று.

இந்த தினத்தில் அவரைப் பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் எழுதியுள்ள புகழாரத்தில் கூறுகையில்,
இந்த சோகம் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதை நினைக்கையில் வருத்தமாக உள்ளது. கிரிக்கெட்டில் அவர் படைத்த சாதனைகளை அவரின் அருமையான குணங்கள் முந்திக்கொள்ளும். எப்பொழுதும் நல்லதையே நினைப்பவர், அன்பானவர், நகைச்சுவையுடன் பேசுபவர் என்று இப்படி அவரது நல்ல குணங்களை பற்றி பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம்.
எனக்கு சகோதரர்கள் கிடையாது. ஆனால் பில் என் உடன்பிறவா சகோதரர் என்று கூறிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். நான் இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியதில் இவ்வளவு உண்மையான, தாராள மனம் கொண்டவரை பார்த்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications