Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Michael Schumacher: ஃபார்முலா 1 கிங் இஸ் பேக்.. 12 ஆண்டு போராட்டத்திற்கு பின் உடல்நலம் முன்னேற்றம்

சுவிட்சர்லாந்து: ஃபார்முலா 1 ஜாம்பவான் மைக்கேல் ஷூமேக்கர் (Michael Schumacher) 12 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு ஆல்ப்ஸ் பனி மலைப்பகுதியில், பனிச்சறுக்கில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால், மூளைப் பாதிப்பு ஏற்பட்டு, படுக்கையில் இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோமாவில் இருந்து வெளியே வந்த ஷூமேக்கர், தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் மேஜோர்காவில் உள்ள ஜெனிவா ஏரி அருகிலுள்ள 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இல்லத்தில் அவர் தற்போது சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்படுகிறார்.ஷூமேக்கரின் உடல்நிலை 12 ஆண்டுகளாக ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்களுக்கு மட்டுமே அது தெரியும். அவரது 30 ஆண்டுகால மனைவி கொரினா, 24 மணி நேர செவிலியர்கள், சிகிச்சையாளர்கள் குழுவுடன் கவனித்து வருகிறார்.

வாரத்திற்கு இதற்காக இந்திய ரூபாய் மதிப்பில் 12 லட்சம் செலவாகிறது."அவரது மோசமான நிலையிலான படங்களை விற்க முயன்ற சில முன்னாள் ஊழியர்கள் கடந்த ஆண்டு தண்டிக்கப்பட்டனர். முதல் பில்லியனர் விளையாட்டு வீரர் ஷூமேக்கர் சூடோகோமா அல்லது லாக்ட்-இன் சின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. உணர்வுடன் கண் சிமிட்டுவதைத் தவிர எதற்கும் அசைவற்ற இந்த நிலையே இந்த நோயாகும். "தன்னைச் சுற்றியுள்ள சிலவற்றை அவர் புரிந்துகொள்வதாய் தோன்றுகிறது. ஆனால் அனைத்தையும் அல்ல" என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஷூமேக்கரின் பிரைவசியை பாதுகாப்பது தற்போது அவர்களுடைய குடும்பத்தினருக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. சமீபத்தில் அவரது பிறந்தநாளையொட்டி, ஷூமேக்கரின் மகள் விபத்துக்கு முன் குடும்பத்துடன் எடுத்த அரிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். "என்றும் மிகச் சிறந்தவர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா" என்ற தலைப்புடன் புன்னகையுடன் கூடிய படம் இடம்பெற்றது.

ஜெர்மனியை சேர்ந்த ஷூமேக்கர், பார்முலா ஒன் கார் பந்தயத்தில் 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 57 வயதான ஷூமேக்கர், இதுவரை 91 ஃபார்முலா ஓன் பந்தயங்களையும், 155 முறை பந்தயத்தில் முதல் 3 இடத்தையும் பிடித்துள்ளார். Pole position எனப்படும் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்து, பந்தயத்தை இதுவரை 68 முறை முதல் இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் வெளியான F1 திரைப்படத்தில் கூட ஹீரோ பிராட் பிட், மைக்கேல் ஷூமேக்கர் காலத்தில், அவருக்கு சக போட்டியாளராக இருந்தார் என்ற வசனங்கள் இடம்பெறும்.

Story first published: Thursday, January 29, 2026, 15:50 [IST]
Other articles published on Jan 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+