Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீட்டிலேயே ரூ. 348 கோடியில் மருத்துவமனை - சூமாக்கரின் மருத்துவ செலவு வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய்!

பெர்ன்: பனிச்சறுக்கு விளையாட்டில் படுகாயமடைந்து கடந்த 9 மாதங்களாக சிகிச்சைப் பெற்று வரும் பார்முலா -1 கார் பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கரின் மருத்துவச் செலவு வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்முலா-1 கார் பந்தயத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் சூமாக்கர். இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கினார்.

Michael Schumacher Medical Bills 1,00,000 Pounds-a-Week!

இதில், தலையில் பலத்த காயமடைந்த சூமாக்கர் சுயநினைவை இழந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த சூமாக்கர் சமீபத்தில் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது வீட்டிலிருந்த படியே அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சூமாக்கருக்கு சிகிச்சை அளிப்பதற்கென்றே சுவிட்சர்லாந்தில் உள்ள அவரது வீட்டில் 35 மில்லியன் பவுண்ட்ஸ் செலவில் ( இந்திய மதிப்பில் ரூ. 348 கோடி ) பிரத்யேகமாக மருத்துவமனை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் சூமாக்கருக்கு 15 பேர் கொண்ட மருத்துவக்குழு ஒன்று 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் சூமாக்கரின் மருத்துவச் செலவிற்கென்று வாரம் ஒரு லட்சம் பவுண்ட்ஸ் செலவாகிறதாம். இந்திய மதிப்பில் இது ஒரு கோடி ரூபாய் ஆகும்.

Story first published: Friday, September 19, 2014, 10:20 [IST]
Other articles published on Sep 19, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+