Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எலிமினாடோ...”: ஜீரணிக்க முடியாத தோல்வியுடன் வெளியேறிய ஸ்பெயின்!

ரியோடி ஜெனீரோ: ஒட்டுமொத்த ஸ்டேடியமும் ஆட்டம் முடியும் வரை கத்திக் குதூகலித்து, களேபரப்பட்ட நிலையில் ஆட்டத்தின் முடிவில் ஸ்டேடியத்தின் ஒரு பக்கத்திலிருந்து மட்டும் உற்சாகம் விண்ணைத் தொட்டு முட்டி நின்றது.. எலிமினாடோ என்ற கூக்குரல்களும் கதறடித்தன.. அதை பெரும் சோகத்துடன் கேட்டபடி ஒரு அணியின் வீர்ர்கள் மட்டும் பெரும் சோகத்துடன் நடையைக் கட்டினர்.

சிலி - ஸ்பெயின் இடையிலான உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் ஆட்ட நிறைவில் கண்ட காட்சி இது.

மரகானா ஸ்டேடியத்தில் நடந்த இந்த பெரும் விறுவிறுப்பான போட்டியில் ஸ்பெயின் ஒரு கோல் கூட போடாமல் 2 கோல்களை வாங்கி சிலியிடம் சின்னாபின்னமாகிப் போனது.

நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் அடுத்தடுத்து 2 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரிலிருந்தும் வெளியேறியிருப்பது ஸ்பெயின் வீரர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களோ இதை ஜீரணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

எலிமினாடோ

எலிமினாடோ

இரு அணிகளுக்கும் இடையாலன போட்டி முடிந்தபோது கூடியிருந்த சிலி ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் எலிமினாடோ அதாவது

வெளியேற்றப்பட்டதுஎன்ற கோஷத்தை உற்சாகமாக எழுப்பி குதூகலித்தனர். ஸ்டேடியமே அதிர்ந்தது.

வரலாறு காணாத தோல்வி

வரலாறு காணாத தோல்வி

இதற்கு முந்தைய உலகக் கோப்பைப் போட்டிகளில் இப்படி நடப்புச் சாம்பியன் அணி ஒன்று இவ்வளவு வேகமாக போட்டித் தொடரை விட்டு வெளியேறியது கிடையாது.

பரிதாபத் தோல்வி

பரிதாபத் தோல்வி

ஜாம்பவான் அணிகளில் ஒன்றான ஸ்பெயின் இப்படி மண்ணைக் கவ்வியதையும், கோல் கூட போட முடியாமல் திணறித் தவித்ததையும் பார்த்து ஸ்பெயின் ரசிகர்கள் சோர்ந்து போய் விட்டார்கள்.

எல்லாமே சோகம்

எல்லாமே சோகம்

முதலில் நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல் கணக்கில் கேவலமான தோல்வியைச் சந்தித்த ஸ்பெயின், அடுத்த போட்டியில் சிலியிடம் 0-2 என்ற கணக்கில் வீழ்ந்தது வரலாற்றுச் சோகம்தான்.

கேஸில்லாஸ்தான் காரணமா..?

கேஸில்லாஸ்தான் காரணமா..?

முதல் போட்டியிலும் ஸ்பெயின் கேப்டன் இகர் கேஸில்லாஸ் மீதுதான் புகார்கள் குவிந்தன. அவர்தான் ஸ்பெயின் கோல் கீப்பரும் கூட. அவர் சரிவர செயல்படாமல் போனதால்தான் நெதர்லாந்திடம் தோற்றதாக கொதிப்பு இருந்தது ரசிகர்களிடம். இதனால் சிலி போட்டியில் அவர் நீக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் கூட இருந்த்து. ஆனால் கேஸில்லாஸ் ஆடினார். இந்த முறையும் அவரால் சிலியின் கோல்களைத் தடுக்க முடியாமல் போனதால் கேஸில்லாஸ் மீது கோபம் அத்தனையும் திரும்பியுள்ளது.

வந்த பந்தை வாங்கிக் கட்டிக் கொண்ட கேஸில்லாஸ்

வந்த பந்தை வாங்கிக் கட்டிக் கொண்ட கேஸில்லாஸ்

சிலி ஒரு கோல் போட்டிருந்த நிலையில், 43வது நிமிடத்தில், சிலி போட்ட கோலை தடுத்து நிறுத்தினார் கேஸில்லாஸ். ஆனால் அந்தப் பந்தை வேகமாக அவர் உள்ளே அடித்தபோது அது அப்படியே ஓடி வந்து சிலியின் அரங்குயிஸின் காலில் தஞ்சமடைந்த்து. விடுவாரா அரங்குயிஸ்.. அப்படியே அதை அவர் திருப்பி அடிக்க.. அது கோலானது.. கேஸில்லாஸ் விரக்தியில் நொந்தே போய் விட்டார்.

அதி வேக சிலி வீரர்கள்

அதி வேக சிலி வீரர்கள்

சும்மா சொல்லக் கூடாது. சிலி வீரர்கள், ஸ்பெயின் வீரர்களை விட படு வேகமாக, துரிதமாக செயல்பட்டனர். மின்னல் வேகத்தில் ஓடினர்.. வந்த பந்தையெல்லாம் கோலாக்கத் துடித்தனர். அந்த துடிப்பும், வேகமும் ஸ்பெயினிடம் சற்று குறைவாகவே இருந்தது.

வயசாகிப் போச்சோ…?

வயசாகிப் போச்சோ…?

ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர்கள் பலருக்கும் 30 வயதுக்கு மேல் என்பது பெரிய மைனஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது. ஸேவிக்கு 34, கேஸில்லாஸுக்கு 33, ஸேபி அலோன்சாவுக்கு 32.

மன்னிப்பு.. ஸ்பெயின் ரசிகர்களுக்குப் பிடிக்காத வார்த்தை

மன்னிப்பு.. ஸ்பெயின் ரசிகர்களுக்குப் பிடிக்காத வார்த்தை

போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு கேப்டன் கேஸில்லாஸ் விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டுள்ளார். ஆனால் கேஸில்லாஸ் கூறுவதை ஏற்க ரசிகர்கள் தயாராகவே இல்லை. கேஸில்லாஸ் மீது அவ்வளவு கோபமாக உள்ளனர் அவர்கள்.

என்னதான் வலிமையானவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் முடிவு என்று உண்டு.. அதைத்தான் ஸ்பெயின் சோகம் நிரூபித்துள்ளது.

Story first published: Thursday, June 19, 2014, 12:13 [IST]
Other articles published on Jun 19, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+