ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அணியில் இடம்பிடித்து அசத்திய ரேணுகா.. சிறு வயதில் வீடு வீடாக பால் விற்றவர்
டெல்லி: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண்ணான ரேணுகா யாதவ், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பிடித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம், ராஜ்நந்தகோன் பகுதியை சேர்ந்தவர், ரேணுகா யாதவ். இவரது உறவினர்கள் மாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
ரேணுகாவின் பெற்றோர், கூலி வேலை செய்து வந்தனர். வறுமையில் இருந்த குடும்பத்திற்கு உதவுவதற்காக சிறு வயதில் வீடு வீடாக சென்று பால் சப்ளை செய்து வந்தார் ரேணுகா.

7வது முதல்
இருப்பினும், ஹாக்கி விளையாட்டு மீது ரேணுகாவுக்கு ஆர்வம் அதிகம். இதனால், 7வது படிக்கும்போது முதல், ஹாக்கி விளையாட ஆரம்பித்தார்.

ஓயாத உழைப்பு
தனது திறமை, அர்ப்பணிப்பு, உழைப்பு போன்றவற்றால், ஹாக்கியில் சிறந்த வீராங்கனையாக உருவாக தொடங்கினார். இதனால் இந்திய ஹாக்கி அணியிலும் இடம் கிடைத்தது.

மகளிர் அணிக்கு வாய்ப்பு
ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 36 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக இந்திய மகளிர் அணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரேணுகாவுக்கு அணியில் வாய்ப்பு
இந்திய ஹாக்கி அணியில், ரேணுகாவுக்கும் இடம் கிடைத்துள்ளது. மிட்ஃபீல்டரான ரேணுகா யாதவ், பிரேசில் புறப்பட்டுள்ளார். நாமும் அவரை வாழ்த்தலாமே.


Click it and Unblock the Notifications