Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Mirabai Chanu: பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் மெடல் - வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது. பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நேற்று (ஜுலை.23) கோலாகலமாக தொடங்கிய நிலையில், இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பளுதூக்கும் போட்டியில், பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார்.

வெள்ளிப்பதக்கம்

வெள்ளிப்பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை பளுதூக்கும் பிரிவில், மீராபாய் சானு வென்றுள்ளார். பெண்கள் 49 கிலோ பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 87 கிலோ மற்றும் 115 கிலோ ஆகியவற்றில் அவரது லிஃப்டிங் மிக அபாரமாக இருந்தது. இது அவருக்கு மொத்தம் 202 கிலோ எடையைக் கொடுத்தது. அதேசமயம், சீனாவின் ஜிஹுய் ஹூ 210 கிலோ மொத்த எடை தூக்கி புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார். இந்தோனேசியாவின் கான்டிகா ஐசா, மொத்தம் 194 கிலோவுடன் மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றார்.

மகிழ்ச்சியான தொடக்கம்

மகிழ்ச்சியான தொடக்கம்

இந்த வெற்றியின், டோக்கியோ 2020 ,ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் மெடல் கணக்கை வைத்துள்ளார் மீராபாய் சானு. இதுகுறித்து பிரதமர் மோடி, மீராபாய்க்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், இதைவிட ஒரு மகிழ்ச்சியான தொடக்கம் இருக்க முடியாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மீராபாய் சானுவின் பதக்கத்தால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சுடுதலில் ஏமாற்றம்

துப்பாக்கிச் சுடுதலில் ஏமாற்றம்

இன்றை நாளில், இந்தியாவை பொறுத்தவரை ஹாக்கி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய ஆண்கள் அணி வீழ்த்தியது மற்றொரு தருணங்களாக அமைந்தது. எனினும், இன்று வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டியிலும் இந்தியா பதக்க வாய்ப்பை இழந்துள்ளது.

ஆசிய நாடுகள் ஆதிக்கம்

ஆசிய நாடுகள் ஆதிக்கம்

எனினும், இந்த சோகங்களுக்கு ஆறுதலாய், உற்சாகமாய் அமைந்துள்ளது மீராபாய் சானுவின் வெள்ளிப்பதக்கம். இதில் மற்றொரு விஷயத்தை நீங்கள் கவனித்தீர்களா? பளுதூக்குதலில் முதலிடம் பிடித்த சீனா, இரண்டாம் இடம் பிடித்த இந்தியா, மூன்றாம் இடம் பிடித்த இந்தோனேசியா ஆகிய 3 நாடுகளும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, July 24, 2021, 17:02 [IST]
Other articles published on Jul 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+