For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அம்மா 19 வயதில்தான் ஜெயிச்சாங்க, எனக்கு 18 தானே ஆகுது அங்கிள்...!

ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் போட்டியில்தான் எத்தனை எத்தனை சுவராயஸ்க் கதைகள்.. அதில் ஒன்றுதான் ஜார்ஜியாவின் நினோ சலுக்வட்ஸே மற்றும் மச்சவாரியானியின் கதை.

நினோவுக்கு வயது 47, மச்சவாரியானிக்கு ஜஸ்ட் 18தான். இருவரும் அம்மா, பையன். இருவரும் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர். மகனுடன் சேர்ந்து அம்மாவும் களம் இறங்கியிருப்பதால் ஜார்ஜியா மக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

ஆனால் போட்டி என்று வந்து விட்டால் நான் பாயும் புலி. என் மகனுக்கு சற்றும் சளைக்க மாட்டேன் என்று விரல் சொடுக்கி உற்சாகமாக சொல்கிறார் நினோ.

முதல் அம்மா - மகன் ஜோடி

முதல் அம்மா - மகன் ஜோடி

ஒலிம்பிக் போட்டி ஒன்றில் ஒரே சமயத்தில் பங்கேற்கும் அம்மா, மகன் ஜோடி இவர்கள்தான். இதில் நினோவின் வரலாறு சற்றே நீளமானது. பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பங்கேற்கும் நினோவுக்கு இது 8வது ஒலிம்பிக் போட்டியாகும்.

சோவியத் யூனியன் மற்றும் ஜார்ஜியா

சோவியத் யூனியன் மற்றும் ஜார்ஜியா

ஜார்ஜியாவைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டவர். இந்த முறை அவர் 2 காரணங்களுக்காக வரலாறு படைத்துள்ளார்.

புதிய சாதனை

புதிய சாதனை

ஒலிம்பிக் வரலாற்றில் அதிக முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட சாதனையை ஜெர்மனி/இத்தாலியைச் சேர்ந்த ஜோசபா இடம் குரெரனிதான் வைத்துள்ளார். அவர் எட்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அந்த சாதனையை நினோ சமன் செய்துள்ளார். அடுத்து தனது 18 வயது மகனுடன் ஒரே பிரவில் மோதுகிறார்.

மகன்தான் உந்து சக்தி

மகன்தான் உந்து சக்தி

இதுகுறித்து நினோ கூறுகையில் நான் முதல் முறையாக 1988ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றேன். அதில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றேன். அதன் பிறகு எனது ஒலிம்பிக் பயணம் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் போட்டி கடுமையாக உள்ளது. ஆனாலும் எனக்கு உந்து சக்தியாக இருப்பது எனது மகன்தான். அவனைப் பார்த்துதான் நானும் உத்வேகம் கொள்கிறேன்.

சியோலில் சாதனை

சியோலில் சாதனை

1988ம் ஆண்டு சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நான் சோவியத் யூனிசன் சார்பில் பங்கேற்றேன். அந்த போட்டியில் நான் புதிய ஒலிம்பிக் சாதனையும் படைத்தேன். உலக சாதனையும் படைத்தேன் என்று கூறுகிறார் நினோ.

தொடர்ந்து போட்டி

தொடர்ந்து போட்டி

அதன் பிறகு அவர் 1992, 96, 2000, 2004 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றாலும் பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை. இடையில் 1997ம் ஆண்டு தனது மகனைப் பெற்றெடுத்தார் நினோ.

தேசியக் கொடியைச் சுமந்தேன்

தேசியக் கொடியைச் சுமந்தேன்

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இது அவரது 3வது ஒலிம்பிக் பதக்கமாகும். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஜார்ஜியா அணிக்குத் தலைமை தாங்கி அணிவகுப்பின்போது தேசியக் கொடியை சுமந்து நடந்தார். அது அவரது 7வது ஒலிம்பிக் போட்டியாகும்.

சுடாத பதக்கம் இல்லை

சுடாத பதக்கம் இல்லை

நினோவின் சாதனைகள் அளப்பறியது. அவர் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 4 முறை ஐரோப்பிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் என சுட்டுக் குவித்துள்ளார்.

மகனுடன் விளையாடுவது ஜாலியானது

மகனுடன் விளையாடுவது ஜாலியானது

தற்போது மகனுடன் விளையாடுவது குறித்து அவர் கூறுகையில், எனது மகனுடன் விளையாடுவது ரொம்பவே ஜாலியாக உள்ளது. அதேசமயம், புத்துணர்வாகவும் உணர்கிறேன். இது அவனுக்கு ஆரம்பம்தான். ஆனால் அவனை நினைத்து நான்தான் டென்ஷனாக உள்ளேன்.

போட்டிக் களத்தில் நான் குரு.. கிராமத்தில் அம்மா

போட்டிக் களத்தில் நான் குரு.. கிராமத்தில் அம்மா

அதேசமயம், போட்டிக் களத்தில் நான் அவனது பயிற்சியாளர், குரு. ஒலிம்பிக் கிராமத்தில் அவனுக்கு நான் அம்மாவாக மாறி விடுவேன். ஆனால் அவன் என்னைப் போன்ற வயதானவர்களிடம் நேரம் செலவிடுவதில்லை. இளைஞர்களுடன்தான் சேர்ந்தே இருக்கிறான் என்றார் நினோ.

பக்கா இளைஞன்

பக்கா இளைஞன்

நி்னோவின் மகன் மச்சவாரியானி 50 மீட்டர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய இரு பிரிவுகளில் கலந்து கொள்கிறார். இவரது தாயார் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டியிடுகிறார். ஒரு பக்கா இளைஞனாக பேசுகிறார் மச்சவாரியானி. இப்போட்டியில் பதக்கம் வெல்வதை விட சாதனை செய்வதே தனது லட்சியம் என்பது அவரது கருத்தாகும்.

இன்னும் ஒரு வருஷம் ஆகட்டும் அங்கிள்!

இன்னும் ஒரு வருஷம் ஆகட்டும் அங்கிள்!

அப்படியானால் பதக்கம் என்று கேட்டால், என்னுடைய அம்மாவுக்கே 19 வயதில்தான் பதக்கம் கிடைத்தது. எனக்கு இப்போது 18 தானே ஆகிறது என்று கூறிச் சிரிக்கிறார்.

Story first published: Tuesday, August 9, 2016, 9:58 [IST]
Other articles published on Aug 9, 2016
English summary
A Mom and Son duo has teamed up for Rio games in the firing.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+