ஒலிம்பிக் போட்டியை வரவேற்க உலகமே ஜொலிக்கிறது.. மக்கள் கூடும் இடங்களில் சிறப்பு சீரியல் செட்
ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக்கை வரவேற்பதற்காக, உலகின் முக்கிய சின்னங்களுக்கு, சிறப்பு மின்சார ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் அந்த நாட்டு நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு (நமது நாட்டு நேரப்படி நாளை அதிகாலை 4.30 மணி) ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இது 31வது ஒலிம்பிக் போட்டியாகும்.
உலகமெங்கும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் இதை ஒரு திருவிழாவாக பார்க்கிறார்கள். அவர்கள் உற்சாகத்திற்கு தீனி போடும் வகையில் சில ஏற்பாடுகளை பல்வேறு நாடுகள் செய்துள்ளன.

மீட்பர் ஏசு
பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோவில் கார்கோவடோ மலையின் உச்சியில் 710 மீட்டர் உயரத்தில் மிக பிரமாண்டமான மீட்பர் ஏசு சிலை நிறுவப்பட்டுள்ளது. அது ஒரு புராதான சிலையாக மதிக்கப்படுகிறது. அங்கு பச்சை மற்றும் மஞ்சள் வண்ணத்தில் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

பல நகரங்கள்
ஏதன்ஸ் நகரின் பனதெநாக் ஸ்டேடியம், தோகாவிலுள்ள அஸ்பையர் கோபுரம், ஜோகனஸ்பர்க்கிலுள்ள நெல்சன் மண்டேலா பாலம், லிமாவிலுள்ள தேசிய ஸ்டேடியம், பாரீசிலுள்ள ஹோட்டல் டி வில்லே, சிட்னியிலுள்ள ஓபரா ஹவுஸ், ஜப்பானிலுள்ள மிக உயர்ந்த கட்டிடமான ஸ்கைட்ரீ ஆகியவை இரு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஒளிரும்
ஜப்பான் 2020ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த உள்ளது. எனவே, ஸ்கைட்ரீ கட்டிடத்தில் அடுத்த ஒலிம்பிக் நடக்கும்வரை வண்ண விளக்கு எரியப்போகிறதாம்.

வண்ணம் மாறும்
நடப்பு ஒலிம்பிக்கில், ஜப்பான் வீரர்கள் தங்கம் வெல்லும்போதெல்லாம், இந்த கட்டிடத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை இணைந்து வண்ணத்தில் விளக்குகளை ஒளிரச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications