Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை போட்டித்தொடரின் மிக முக்கிய தருணங்கள்- ஒரு பார்வை

ரியோடி ஜெனிரோ: கடந்த மாதம் 12ம்தேதி பிரேசிலில் தொடங்கிய உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டித்தொடர் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது. ஜெர்மனி கோப்பையை கைப்பற்றி தனது ஆளுமையை நிலைநாட்டியுள்ளது. பிரேசிலில் நடந்து முடிந்த உலக உலக கோப்பையில் சில முக்கிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. சில நிகழ்வுகள், ஆட்டத்தொடரின் போக்கையை மாற்றியமைக்கும் திருப்புமுனையாகவும் அமைந்துள்ளன.

இந்த நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானவற்றை பார்க்கலாம்.

ஆரம்பமே அமர்க்களம்

ஆரம்பமே அமர்க்களம்

உலக கோப்பையின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இருந்த, பிரேசிலும், குரோசியாவும் மோதின. முதல் கோலே, பிரேசில் வீரரால் அடிக்கப்பட்ட சேம் சைடு கோலாக அமைந்துவிட்டது. போட்டி தொடங்கிய 11 நிமிடத்தில், குரோஷியாவின் நிக்கிக்கா ஜெலாவிக் கோல் அடிக்க முயன்றார். அதைத் தடுக்க முயற்சித்தார் பிரேசிலின் மார்செலோ. ஆனால் மார்செலோவின் காலில் பட்டு கோலானதால் அவரே சேம் சைட் கோல் அடித்து குரோஷியாவுக்கு லீட் எடுத்துக் கொண்டார். இருப்பினும் பிரேசில்தான் வெற்றி பெற்றது. உலக கோப்பை வரலாற்றில் முதல் போட்டியின் முதல் கோல் இப்படி சேம் சைடு கோலாக இருந்தது இதுதான் முதல்முறை.

நடிகர் திலகம் அர்ஜென் ரோபன்

நடிகர் திலகம் அர்ஜென் ரோபன்

நாக்-அவுட் சுற்றின்போது, மெக்சிகோவும், பலமான நெதர்லாந்தும் ஆட்ட நேரம் முடிவடையும் தருவாய் வரை ஒரு கோலையும் போட முடியாமல் தவித்தன. அப்போது நெதர்லாந்தின் அர்ஜென் ரோபன், வேண்டுமென்றே கீழே விழுந்துவிட்டு, மெக்சிகோ வீரர் தட்டிவிட்டதை போல புரண்டு துடித்தார். இதை கவனிக்காத நடுவரும், பெனால்டி கிக் வாய்ப்பை கொடுக்க அதன் மூலமாக கோல் அடித்து நெதர்லாந்து வெற்றி பெற்றது.

தடுப்பில் சாதனை

தடுப்பில் சாதனை

லீக் போட்டியில் பெல்ஜியம் அணியுடனான போட்டியில் அமெரிக்க கோல் கீப்பர் 36 ஆண்டுகால சாதனையை தகர்த்தார். அமெரிக்க கோல் கம்பத்தை நோக்கி 38 ஷாட்டுகள் அடிக்கப்பட்டன. அதில் 2 கோல்கள் ஆகின. 16 முறை பந்தை, கோல் கீப்பர் டிம் ஹோவர்ட் அபாரமாக தடுத்து நிறுத்தினார். பிற ஷாட்டுகள் வீணாகின. இதற்கு முன்பு 1978ம் ஆண்டு, பெரு நாட்டு கால்பந்தாட்ட அணியின் கோல் கீப்பர் ரமோன் குயிரோகா 13 முறை பந்தை தடுத்து சாதனை நிகழ்த்தியிருந்தார். சுமார் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அதைவிட மூன்று முறை அதிகமாக பந்தை தடுத்து டிம் ஹோவர்ட் சாதனஐ நிகழ்த்தினார்.

கடி மன்னன் சுவாரஸ்

கடி மன்னன் சுவாரஸ்

லீக் போட்டியின்போது உருகுவே வீரர் சுவாரஸ், இத்தாலி வீரர் சியலினியின் தோள்பட்டையில் கடித்து காயப்படுத்தினார். இதற்காக உடனடியாக உலக கோப்பை தொடரை விட்டு அவர் வெளியேற்றப்பட்டதுடன், 4 மாத காலம் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார். அவரது அப்பீல் மனுவையும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தள்ளுபடி செய்துவிட்டது.

முதுகுக்கு பின்னால் சதி

முதுகுக்கு பின்னால் சதி

காலிறுதி போட்டியின்போது கொலம்பிய வீரர் ஜுவான் ஜுனிகா, பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மரின் முதுகில் முட்டியால் தாக்கி முதுகெலும்பை உடைத்தார். இதனால் நெய்மர் அரையிறுதி போட்டியில் விளையாட முடியாமல்போனது. அரையிறுதியில் பிரேசில் படுதோல்வியை சந்தித்தது. நெய்மர் இல்லாமல் நெதர்லாந்துடன், 3வது இடத்தை பெற நடந்த பலப்பரிட்சையில் பிரேசில் தோல்வியடைந்தது.

பிரேசிலின் மோசமான சாதனை

பிரேசிலின் மோசமான சாதனை

உலக கோப்பை அரையிறுதி போட்டியின்போது பிரேசில் அணி 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோற்றது. பிரேசில் உலக கோப்பை வரலாற்றில் இவ்வளவு கோல்களை விட்டுக்கொடுத்து, மோசமான ஒரு சாதனையை இந்த போட்டியில் பெற்றது. இதனால்தான் பிரேசில் முழுக்க ரசிகர்களின் அழுகுரலாக கேட்டது. அதே நேரம் ஜெர்மனி அணியும் இப்படி ஒரு வெற்றியை பிரேசிலுக்கு எதிராக பெற்றதில்லை.

அதிக கோல் அடித்து சாதனை

அதிக கோல் அடித்து சாதனை

அரை இறுதியில் பிரேசிலுக்கு எதிராக மிரோஸ்லவ் குளோஸ் ஒருகோல் அடித்ததன் மூலம், உலக கோப்பை தொடரில் தனது 16வது கோலை அடித்து அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். பிரேசிலின் ரொனால்டோ சாதனையை அவர் முறியடித்தார். 36 வயதாகும் குளோஸ் 2002, 2006, 2010, 2014 ஆகிய 4 உலக கோப்பை தொடர்களில் 23 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜெர்மனி சாதனை

ஜெர்மனி சாதனை

தென் அமெரிக்க நாடுகளில் நடந்த உலக கோப்பை போட்டியொன்றில் ஐரோப்பிய நாடு கோப்பையை வெல்வது இதுதான் முதன்முறையாகும். இந்த சாதனையை ஜெர்மனி படைத்துள்ளது. அதுமட்டுமின்றி 2002ம் ஆண்டு முதல் இப்போதுவரை அனைத்து உலக கோப்பை போட்டித்தொடரிலும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையையும் ஜெர்மனி தட்டிச் சென்றது.

Story first published: Monday, July 14, 2014, 11:07 [IST]
Other articles published on Jul 14, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+