Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் புதிய லுக்... சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உற்சாகம்

சென்னை : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த ஒரு வருடமாக விலகியிருந்தாலும் எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக உள்ளார்.

Recommended Video

Dhoni's different hairstyle and looks

ஐபிஎல் 2020 தொடரில் இவர் விளையாடுவார், அவரது ஆட்டத்தை கண்டு ரசிக்கலாம் என்ற கனவுடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடர் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத எம்எஸ் தோனி, தற்போது, தன்னுடைய புதிய லுக் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை சிஎஸ்கே தன்னுடைய வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் கொண்டாடி தள்ளிவிட்டனர்.

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கடந்த ஜூலை மாதத்திலிருந்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறது. அவர் போட்டிகளில் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் அவரை அவரது ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

தொடரை நடத்த கங்குலி உறுதி

தொடரை நடத்த கங்குலி உறுதி

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 29ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரை நடத்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தீவிரமாக உள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் இல்லாமல் நிறைவுபெறாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருப்பு

ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருப்பு

ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டால் யாருக்கு மகிழ்ச்சி இருக்குமோ இல்லையோ, தோனி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். அந்த அளவிற்கு அவரது ஆட்டத்தை பார்க்க அவர்கள் காத்திருக்கின்றனர். கேப்டன் விராட் கோலி போல தோனி, சமூக வலைதளத்திலும் அதிகளவில் காணப்படுவதில்லை. அவரது மனைவி சாக்ஷியே அவர்குறித்த அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

சிஎஸ்கே பகிர்வு

சிஎஸ்கே பகிர்வு

இந்நிலையில் தன்னுடைய புதிய லுக் குறித்த வீடியோவை தோனி தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் கேப்டனாக உள்ள ஐபிஎல்லின் சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ஏராளமான ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

Story first published: Saturday, July 18, 2020, 10:47 [IST]
Other articles published on Jul 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+