Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காத்திருந்த ரசிகர்கள்... பைக்கில் வந்து கையசைத்த கேப்டன் கூல்

ராஞ்சி : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் பிறந்தநாளையொட்டி கடந்த 7ம் தேதி அவர் தான் டாக் ஆப் தி டவுனாக இருந்தார்.

Recommended Video

Dhoni's bike ride in his farm house on his birthday

முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் என தோனியை வாழ்த்து மழையில் நனையவிட்டனர். பாண்டியா பிரதர்ஸ் தோனியை நேரில் கண்டு வாழ்த்து தெரிவிக்க ராஞ்சிக்கே சென்றுவிட்டனர்.

இந்நிலையில், ராஞ்சியில் அவரது பண்ணை வீட்டில் அவரை காண ரசிகர்கள் காலை முதலே காத்திருந்தனர். இதையடுத்து தன்னுடைய பைக்கில் ரைட் வந்த தோனி அவர்களை பார்த்து கையசைத்தார்.

ட்ரெண்டிங்கான பிறந்தநாள்

ட்ரெண்டிங்கான பிறந்தநாள்

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்போதுமே அனைவருக்கும் குறிப்பாக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானவராக விளங்குகிறார். கடந்த ஒரு ஆண்டாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத தோனியை, ஐபிஎல் தொடரில் கண்டு ரசிக்கும் அவர்களின் கனவு கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி போயுள்ளது.

முன்னாள், இந்நாள் வீரர்கள் வாழ்த்து

முன்னாள், இந்நாள் வீரர்கள் வாழ்த்து

இந்நிலையில் கடந்த 7ம் தேதி தோனியின் பிறந்தநாளில் சமூக வலைதளங்களை தெறிக்க விட்டனர் ரசிகர்கள். எங்கும் தோனி, எதிலும் தோனி என்று ட்ரெண்டிங்கில் இருந்தது அவரது பிறந்தநாள். முன்னாள் வீரர்கள் ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டவர்களும், கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்நாள் வீரர்களும் வாழ்த்து மழையை பொழியவிட்டனர்.

பாண்டியா பிரதர்ஸ் நேரில் வாழ்த்து

பாண்டியா பிரதர்ஸ் நேரில் வாழ்த்து

பாண்டியா பிரதர்ஸ் ஒருபடி மேலே போய், ராஞ்சிக்கு நேரில் சென்று தோனியுடன் அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவர்களை ராஞ்சி விமானநிலையத்தில் பார்க்க முடிந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் வரவு கேள்விக்குறியாகி உள்ளது. ஆயினும் அவருக்கு ரசிகர்கள் மற்றும் சக வீரர்களிடம் உள்ள அன்பை இந்த பிறந்தநாள் அனைவருக்கும் காண்பித்தது.

கையசைத்த தோனி

கையசைத்த தோனி

இந்நிலையில் சமூக வலைதளத்தில் வாழ்த்தியதோடு மட்டுமின்றி ராஞ்சியில் உள்ள தோனியின் பண்ணை வீட்டிற்கு சென்று அவரை பார்க்கவும் ரசிகர்கள் முயன்றனர். காலை முதலே அவரது வீட்டின் கேட் முன்பு அவர்கள் தோனியை காண்பதற்காக காத்திருந்தனர். தோனியும் அவர்களை ஏமாற்றவில்லை. தன்னுடைய பைக் மூலம் பண்ணை வீட்டை வலம்வந்த தோனி அவர்களை பார்த்து கையசைத்து மகிழ்ந்தார்.

Story first published: Friday, July 10, 2020, 12:56 [IST]
Other articles published on Jul 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+