For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"தல" தோனிக்கு இனிதான் வேலை இருக்கு.. என்ன பண்ணப் போறார்னு தெரியுமா.. நண்பர் பரபர தகவல்!

ராஞ்சி : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவர் ராணுவத்தில் அதிக நேரத்தை செலவிடுவார் என்று அவரது நீண்டகால நண்பர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.

Recommended Video

IPL- ல் இருந்து ஓய்வு பெற Dhoni இப்படி ஒரு திட்டம்?

ராணுவத்தில் மரியாதை நிமித்த லெப்டினன்ட் கர்னலாக உள்ள எம்எஸ் தோனி கடந்த ஆண்டில் கிரிக்கெட்டிலிருந்து இரண்டு மாதங்கள் ஓய்வு பெற்று ராணுவ வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார்.

தற்போது தோனி ஓய்வு அறிவித்துள்ள நிலையில் மனதளவில் அவர் மிகவும் பிரீயாக இருப்பார் என்றும் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஓய்வை அறிவித்த தோனி

ஓய்வை அறிவித்த தோனி

முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் ஓய்வு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் அவர் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொடர் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வரும் 2022ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தோனி தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.

தோனியின் ஓய்வு அறிவிப்பு

தோனியின் ஓய்வு அறிவிப்பு

வரும் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த டி20 உலக கோப்பை, கொரோனா வைரஸ் காரணமாக வரும் 2022ம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியா இந்த தொடரை நடத்தவுள்ளது. இந்நிலையில், டி20 உலக கோப்பையில் தோனி இடம்பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொடர் தள்ளி போனதும் அவரது ரிடையர்மெண்டிற்கு காரணமாக இருக்கலாம் என்று அவரது நண்பர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் அதிக நேரத்தை செலவிடுவார்

ராணுவத்தில் அதிக நேரத்தை செலவிடுவார்

தற்போது தோனி மனதளவில் மிகவும் பிரீயாக இருப்பார் என்றும் பாண்டே தெரிவித்துள்ளார். ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக உள்ள தோனி சுதந்திர தினத்தில் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இதையடுத்து ராணுவத்தில் அவர் அதிக நேரத்தை செலவிடுவார் என்றும் பாண்டே கூறியுள்ளார். கடந்த ஆண்டில் கிரிக்கெட்டிலிருந்து இரண்டு மாதங்கள் இடைவெளி பெற்று ராணுவ வீரர்களுடன் இணைந்து அவர் பயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதிக விளம்பரங்களில் ஒப்பந்தம்

அதிக விளம்பரங்களில் ஒப்பந்தம்

இந்நிலையில், ரிடையர்மெண்ட் ஆனதால், அவருடைய மதிப்பு சற்றும் குறையவில்லை என்றும் பாண்டே தெரிவித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாகக தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடாதபோதும், 10 புதிய நீண்டகால விளம்பரங்களில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரை ரசிகர்கள் ஒரு வீரராக பார்ப்பதில்லை என்றும் அவர் இளைஞர்களின் கனவு நாயகனாகவே பார்க்கப்படுவதாகவும் மேலும் கூறினார்.

Story first published: Monday, August 17, 2020, 11:59 [IST]
Other articles published on Aug 17, 2020
English summary
MS Dhoni will likely be spending much more time with the Territorial Army now that he has retired, says Longtime Friend Arun Pandey
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+