160 கிமீ வேகத்தில் பந்து வீச படேல் பயிற்சி
வதோதரா:
இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல் தனது பந்து வீச்சுவேகத்தை 160 கி.மீ ஆக உயர்த்த சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்திய அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான முனாப் படேல் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 14 விக்கெட்களை கைப்பற்றினார். லாராவைமூன்று முறை அவுட் ஆக்கினார்.
![]() |
தற்போது இவர் மணிக்கு 144.9 கி.மீ வேகத்தில் பந்து வீசி வருகிறார். 160 கி.மீவேகத்தில் பந்து வீசுவதே தனது லட்சியம் என அவர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
பந்து வீச்சு முறையில் சிறிய மாற்றங்களை செய்து வருகிறேன். பந்து வீசும் வேகத்தை160 கி.மீ ஆக உயர்த்துவதே என் லட்சியம். அதை விரைவில் அடைவேன். இதற்காகஅதிக பயிற்சி எடுத்து வருகிறேன். உலக கோப்பை போட்டியில் ஆடுவதை மிகவும்எதிர்நோக்கி உள்ளேன்.
ஒவ்வொரு வீரருக்கும் உலக கோப்பை போட்டியில் விளையாடும் மிகப் பெரியகனவாக இருக்கும். அந்த கனவு எனக்கும் உண்டு. இப்போதைக்கு அடுத்த மாதம்இலங்கையில் நடைபெற உள்ள முத்தரப்பு போட்டியில் கவனம் செலுத்துகிறேன்.
பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி ரன் குவிக்க முயற்சிப்பேன் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:47 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications
