Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறுபடியும் சட்டையைக் கழட்டிப் போட்டு ஆட மாட்டேன்.. இங். வீரர் பேலன்ஸ்!

லண்டன்: நாட்டிங்காம் டெஸ்ட் போட்டி முடிவில், நைட் கிளப்பில் நடந்த பார்ட்டியின்போது சட்டையைக் கழற்றிப் போட்டு டான்ஸ் ஆடி சர்ச்சைக்குள்ளான இங்கிலாந்து இளம் வீரர் கேரி பேலன்ஸ், இனிமேல் அதுபோல நடக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்த பேலன்ஸ்தான் தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின்போது அபாரமான சதம் அடித்து தனது அணியைக் காத்துள்ளார். இந்த சீசனில் அவர் போடும் 2வது சதமாகும் இது. இதற்கு முன்பு இலங்கையுடனான டெஸ்ட் போட்டியின்போது சதம் அடித்திருந்தார் பேலன்ஸ்.

கடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் பேலன்ஸ் போட்ட 2வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2வது டெஸ்ட்

2வது டெஸ்ட்

நாட்டிங்காம் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் ஆடி வருகின்றன.

ரஹானே சதம்..

ரஹானே சதம்.. "பேலன்ஸ்" செய்த இங்கிலாந்து

இதில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் வேகமாக சரிந்த நிலையில் அஜிங்கியா ரஹானே அபாரமாக சதம் போட்டு இந்தியாவின் மானத்தை சற்றுக் காப்பாற்றினார். ஆனால் தற்போது இங்கிலாந்து கேரி பேலன்ஸ் மூலம் அதையும் சமாளித்து மீண்டுள்ளது.

சதம் போட்ட பேலன்ஸ்

சதம் போட்ட பேலன்ஸ்

கேரி பேலன்ஸ் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தின்போது 110 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தற்போது 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களுடன் உள்ளது.

இதே மைதானத்தில் 2வது சதம்

இதே மைதானத்தில் 2வது சதம்

சமீபத்தில் இலங்கையுடன் நடந்த டெஸ்ட் தொடரின்போதும் பேலன்ஸ் இதே மைதானத்தில் சதம் போட்டிருந்தார். தற்போது 2வது சதத்தைப் போட்டுள்ளார்.

வெரி நைஸ்

வெரி நைஸ்

லார்ட்ஸ் சதம் குறித்து பேலன்ஸ் கூறுகையில், இந்த இடம் விளையாடுவதற்கு அபாரமானது, ரசித்து பேட் செய்கிறன். பொறுமையாக ஆடினாலே போதும் சதம் போடலாம் என்றார்.

டான்ஸ் ஆட மாட்டேன் பாஸ்

டான்ஸ் ஆட மாட்டேன் பாஸ்

நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியின் முடிவில், தோல்வியில் சிக்காமல் டிரா ஆன மகிழ்ச்சியில் நைட் கிளப்பில் நடந்த பார்ட்டியின்போது சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு டான்ஸ் ஆடி சர்ச்சைக்குள்ளானவர்தான் பேலன்ஸ். இதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பேலன்ஸுக்கு சூடு போட்டது. கண்டனமும் தெரிவித்தது. எனவே இந்த முறை அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார் பேலன்ஸ்.

அது ஒரு ஜாலியில் ஆடியது

அது ஒரு ஜாலியில் ஆடியது

இதுகுறித்து பேலன்ஸ் கூறுகையில் ஒரு வேகத்தில் அப்படி அநாகரீகமாக நடந்து கொண்டு விட்டேன். இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன் என்றார் பேலன்ஸ்.

வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஒரு "பேலன்ஸ்" தேவை. அதுதான் நம்மை நல்ல முறையில் "கேரி" செய்து கொண்டு போக உதவும்....இதை கேரி உணர்ந்து விட்டார் என்று நம்புவோம்!

Story first published: Saturday, July 19, 2014, 13:57 [IST]
Other articles published on Jul 19, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+